பக்கம்:மறைமலையம் 14.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

277

ஆங்கிலமொழி பயில்வதிலுங் கருத்துக்கொண் டிருந்தமை யாலும், அவர் தம் பெற்றோரின் உடன்பாடு பெற்று என்னை மணஞ்செய்து கொள்ள வேண்டுமென விரும்பினமையால் ன அவர்களின் உடன்பாடு பெறுதற்கு முன்னே என்னை அழைத்துச் செல்லல் ஆகாதென்று எண்ணியிருந்தமையாலும் யான் அவருடன் செல்லாமல் இருந்தேன். மேலும், வயதுமுதிர்ந்த உன்னைத் தனியே விட்டுப் போகவும் என்மனம் இசையவில்லை. எப்படியாவது உன்னை என் விருப்பத்திற்கு ணக்கி என்காதலரை மணந்து கொண்டு, உன்னையும் என்னோடு அழைத்துச்செல்ல வழிபார்த்திருந்தேன். யான் முதற்பிள்ளை பெற்றபிறகாவது நீ என்வழிக்குவருவாயென்று பார்த்தேன். உனக்கோ சாதிப்பற்றுத் தான் பெரிதாய் இருந்ததே யல்லாமல், என் கற்பைப் பற்றியும் யான் என் மனத்திற் கிசைந்த மணவாளனை மணந்து நன்றாய் வாழல்வேண்டுமே என்பதைப் பற்றியும் நீ சிறிதும் கவலைப் படவில்லை. மற்ற எல்லாவகைகளிலும் எனது நன்மையைக் கோரும் உயர்ந்தகுணமுஞ் சிறந்தசெய்கையும் உடை ய நீ, அவை எல்லாவற்றிலுஞ் சிறந்த என் காதல் அன்பையுங் கற்பொழுக்கத்தையுஞ் சிதைவுபடாமற் காக்க மனம் வைத்தாயில்லை! அவ்வளவு பொல்லாத சாதிப்பற்று உனக்கும் நம்மவர்க்குங் கெட்டிச் சாயம்போல் ஏறி உங்கள் உள்ளத்தை யெல்லாந் தன்மயம் ஆக்கிவிட்டது!” இரண்டாவது ஒருமகவும் ஈன்றேன்! இவ்விரண்டு மகப்போறும் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க நீ பட்டபாடு எழுபிறப்பிலும் என் நினைவைவிட்டு நீங்காது! இரண்டாம் மகப்பெற்ற பின்னும் யான் என் காதலனை மணக்க இசைந்தாயில்லை! இதற்கிடையில் என்காதலரும் என்னை மணந்துகொள்ளத் தம் பெற்றோர்களின் உடன்பாடு பெற்றுக்கொண்டு என்னைத் தம்முடன் வரும்படி வேண்டினார். மறைவிற் பெற்றமையால் என் அருமைக் குழந்தைகள் இரண்டும் என்னைவிட்டுப் பிரியும்படி செய்த ஊழ்வினையின் செயலை எண்ணி எண்ணி மனம் நைந்தேன்! இரண்டாம் மகப் பெற்றபின் நீ அதனை மறைக்கப்பட்டபாடும் என் உள்ளத்தை வருத்திற்று. உன் சொல்லைக் கடந்து நடக்க நேர்ந்ததும் என்னை அழலின் மெழுகாய் உருக்கிற்று. உன் சொற்படி நடந்தால் என் காதலற்குப் பிழை செய்தேன் ஆவேன். என் காதலற்கு இசைய நடந்தால் நீ மனம் வருந்துகின்றாய்! இங்ஙனம் இருதலைக் கொள்ளி எறும்பு’ போல் தத்தளித்த யான் கடைசியாகப் பெண்மக்களுக்குத் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/306&oldid=1582606" இலிருந்து மீள்விக்கப்பட்டது