மறைமலையடிகளார் கடிதங்கள்
299
செவ்வையாக நடைபெறும்படி திருவருள் கூட்டி வைத்தது. உள்ளூரில் மட்டுமே யன்றி வெளியூர்களிலிருந்தும் வந்து குழுமிய அன்பர்கள் ஆறாயிரத்துக்கு மேலாவர். எங்கள் தலைமை யுரைகளும் கருத்துரைகளும் வந்து கேட்ட பெருங் கூட்டத் தினரை மிக மகிழ்வித்தன. சொற்பொழிவாளர்களின் உரைகளும் பெரிதும் பாராட்டத் தக்கனவாயிருந்தன. எல்லாரும் சிவபிரான் திருவருள் இன்பத்தில் தோய்ந்து விளங்கினபடியா யிருந்தனர்.
எமக்கு முந்நூற்றைம்பது ரூபாயும், எம் மகள் மருமகனார்க்கு நூற்றைம்பது ரூபாயும் அவையார் அனுப்பி வைத்தனர். மேலும் எம்முடைய வசதிகளுக்காக முந்நூறு ரூபாய் வரையில் செலவு செய்தார்கள். மொத்தம் சபையாருக்கு மூவாயிர ரூபாய்க்குமேல் செலவாகியிருக்கலாம். இங்ஙனம் சிவத் தொண்டுகளுக்குத் தமது பொருளைச் செலவிடும் புண்ணியவான்களே தவஞ் செய்தவர்கள். பொருளை வீண் வழியிற் செலவு செய்தும் பயன்படாதார்க்கு ஈட்டி வைத்தும் இறப்போர் சிவபிரான் திருவருளை எங்ஙனம் அடைவார்கள்?
அன்புள்ள,
மறைமலையடிகள்
6 - நன்றி
அன்புமிக்க செந்தமிழ்ச் செல்வர்... அவர்கட்கு, அம்பல வாணர் அம்மை திருவருளால் எல்லா நலங்களும் மென்மேற் பெருகுக! நாங்கள் சில நாட்களுக்கு முன் தில்லைக்கு வந்திருந்த காலையில் எங்களை அன்புடன் வரவேற்று விருந்தோம் பினமைக்கும், அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் விரிவுரை செய்வித்துப் பொருளுதவி செய்தமைக்கும் தங்கள்பால் என்றும் நன்றி பாராட்டும் கடமையுடையேன். நுங்கள் அருமை மனைவியார்க்கு என்மனைவியும் யானும் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அருமைக் குழந்தைகட்கு எங்கள் அன்பான முத்தம்.
இனி, யான் தில்லைக்குப் போந்து ஆங்கிலத்தில் ஒரு விரிவுரை செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் தெரிவிக்கும் படி தாங்கள் கூறியதாகச் சொன்னார். ஆங்கில விரிவுரை ஒன்றுக்கு இருநூறு பாயும், போகவர எனக்கு இரண்டாவது வகுப்புச் செலவும் 15 நாட்களுக்கு முன்னமே அனுப்பிவைத்து உதவினால்,