பக்கம்:மறைமலையம் 14.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள்

301

இருத்தற்கு வாய்ப்புக் கிடைத்தமைபற்றிச் சிவபெருமானுக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகின்றேன். இளமையில் நாமிருவரும் ஒரே வகுப்பில் கல்வி பயின்ற நாளில் நாம் அளவளாவி அன்பு பாராட்டிப் பிரிந்த பின் இத்தனை காலங்கழித்து நம்மை மீண்டும் ஒருங்கு கூட்டிய திருவருளுக்கு எமது வணக்கம் உரியதாகுக!

தங்கள் வீட்டார் எல்லார்க்கும் எங்கள் அன்பைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

9

அன்புள்ள,

மறைமலையடிகள்

திருமண வாழ்த்து

15-4-43

அன்புமிக்க ஐயா,

தங்கள் இளைய புதல்வர் திரு. ஜெயராமன் திருமண அழைப்பு வந்தது. குறிப்பிட்ட நாளில் திருமணம் நன்கு நடைபெற்று, மண மகனும் மண மகளும் இல்லற வாழ்க்கையை நல்லற வாழ்க்கையாய் நடத்திக் கொண்டு, பூவும் மணமும் போற் பொருந்தி எல்லா நலங்களுடனும் நீடு இனிது வாழ்கவென்று எல்லாம் வல்ல சிவபெருமானையும் அம்மையையும் வேண்டுகின்றேன். நலம்.

அன்புள்ள,

மறைமலையடிகள்

10 இல்லறம் நல்லறம்

..சந்திரனும் அவன் மனைவியும் பூவும் பூவும் மணமும் அமைந்தாற்போல் அன்பிற் பொருந்தி இல்லறத்தை நல்லறமாய் நடத்திக் கொண்டு தமிழாசிரியர்க்குதவியாய் நீடு இனிது வாழ்கவென்று நம் அம்பலவாணரம்மை

வேண்டுகிறோம்.

திருவருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/330&oldid=1582639" இலிருந்து மீள்விக்கப்பட்டது