68
மறைமலையம் – 15
காலத்துச் செந்தமிழ்ச் சங்க விலக்கியங்களில் அச்சொற்க ளெல்லாம் பொருட்பேதந் தோன்ற மிக நுட்பமாய்ப் பிரயோகிக்கப் பட்டிருக்கும் அருமைபெருமைகள் அச்சங்க விலக்கியங்கள் பெரும் பாலனவற்றிற்கு விழுமிய உரைகண்ட
ஆ
சிரியர் நச்சினார்க்கினியர் ஆண்டாண்டு அச்சொற் பொருணயங் களை நன்கெடுத்து வகுத்து உரையுரைக்கு, மாற்றால் இனி தறியற்பாலனவாம். ஆகவே, ஒன்று என்னும் பொருளைக் குறிப்பதற்கு வடமொழியில் ஏகம் என்னுஞ் சொல் உண்மை யினால் அப்பொருளையே யுணர்த்துதற்கு அத்துவிதம் என்னுஞ் சொல்லும் எழுந்ததென்றலும், ஏகம் அத்துவிதம் என்னும் அவ்விருசொற்களும் தமக்குட் பேதஞ்சிறிதுமின்றி ஒரு பொருளையே யுணர்த்திக் கொண்டு நிற்குமென்றலும் என்னும் యేక మేవా ద్వితీయ బ్రహ வாக்கியத்துள் நின்ற அவ்விரு சொற்களுக்கும் பிரயோசனமுமின்றி ஒரே பொருளைக் கற்பித்தலும் மிகைபடக் கூறுதல் நின்றுவற்றுதல் என்னுங் குற்றங் களுக்கிடனாய் ஒழியும்
என்க.
ஒரு
இனி அதுவேயுமன்றித் தமிழ் வடமொழி முதலான பாஷைகளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்றற் றொடக்கத்து எண்ணுப் பொருள்களைக் குறிக்க ஒன்று, இரண்டு முதலான ஒவ்வோர் சொற்களே காணப் படுகின்றன வன்றி வேறுபிற காணப்படுகின்றில. ஒன்று என்பதற்கு ஏகம் என்னும் ஒரேசொல்லும் இரண்டு என்பதற்குத் துவிதம் என்னும் ஒரேசொல்லும், மூன்று என்பதற்குத் திரிதம் என்னும் ஒரே சொல்லும், நான்கு என்பதற்குச் சதுர்த்தம் என்னும் ரேசொல்லும், ஐந்தென்பதற்குப் பஞ்ச என்னும் என்னும் ஒரே சொல்லுங் காணப்படுதலல்லாமல், வேறு சொற்கள் காணப்படாமையால், பிறவற்றிற்கின்றி இவ்வேகம் என்னும் ஒரு பொருட்கு மாத்திரம் அத்துவிதம் என மற்றொரு பெயருமுண்டென்றல் பாஷாதத்துவம் இனையதென்றறி யாதார் கூறுங்கூற்றாயொழியும். அது கிடக்க.
ரு
இனிப் னிப் பொருளாராயும் நெறியால் வைத்துப் பார்க்கு மிடத்தும் அவ்வத்துவிதம் என்னுஞ்சொல் ஒன்றெனப்