பக்கம்:மறைமலையம் 15.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

71

உடையவாய் முதன்மை யில்லாவாயிருத்தலானும் மற்றை உலகங்கள் அறிவில்லாத சடப் பொருள்களா தலானும் அவனும் அவையும் அவ்வாறு சமமாவான் செல்லுதலில்லை யென்க. இது தெரித்தற்கன்றே ‘அத்விதீயம் ப்ரம்மா என்னாது, ‘ஏகமேவாத்விதீயம் ப்ரம்மா' எனச் சுருதி ‘ஏகம்’ என்னுஞ் சொற்கூட்டிக் கூறுவதாயிற்று. பிரமம் ஏகமேவ என்றமையானே இரண்டு பிரமங்கள் இல்லை, பிரமம் ஒன்றேயுள்ளது என்பது துணியப்படுவதாயிற்று. தேர் முதலாயின பலராற் செய்யப்படுதல்போல, அதிவிசித்திர மான இப்பிரபஞ்சமும் கடவுளர் பலராற் செய்யப்படுவ தென்னும் அநேகேசுரவாதத்தை மறுத்துக் கடவுள் ஒன்றே உள்ளதென நிறுவுதற்பொருட்டுச் சுருதி ‘ஏகமேவ' எனுஞ் சொற் பிரயோகஞ் செய்வதாயிற்றெனும் உண்மையைச் சைவசித்தாந்த பரமாசாரிய மூர்த்திகளான மெய்கண்ட தேவர்,

“ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்றநீபாசத் தோடுளைகாண்--ஒன்றின்றால் அக்கரங்களின்றா மகரவுயிரின்றேல் இக்கிரமத் தென்னு மிருக்கு”

என இனிது தெருட்டியருளினமை காண்க. ஏகமேவ என்ற அச்சொற்களால் பரப்பிரமத்தோடு சமம் பெறுவதில்லை யெனவும், அப்பிரமம் ஒன்றேயாய் உள்ளதெனவும் மிக நுண்ணிய பொருள் நிலைபெறுத்தப்பட்டவாறு காண்க.

இனி அப்பிரமம் தான் ஒன்றேயாய் நிற்பினும், ஏனை உலகுயிர்களை அசைவித்தற்பொருட்டும் அறிவித்தற் பொருட் டும் அநாதி தொட்டு அவற்றோடு வேறறக்கலந்து நின்று பகரித்தலின், அங்ஙனங் கலந்துநிற்கும் உண்மை யினைத் தெருட்டவே பொருட்டன்மையால் ஒன்றாய் நிற்கும் அப்பிரமத்தைச்சுட்டிச் சுருதி ‘அத்விதீயம்' எனவும் மொழிந் திடுவதாயிற்று. பொருட்டன் மையால் தான் ஒன்றே யான பிரமம் ஏனை உலகுயிர்களோடு சம்பந்தமுறாது தனித்து நிற்ப தாயின் ‘அத்விதீயம்' என்னுஞ் சொற்பிரயோகம் வேண்டாமல் ஏக மேவ ப்ரம்மா’ என்று மாத்திரமே கூறஅமையும். அங்ஙனந் தான் வேறு உலகுயிர்கள் வேறெனத் தனித்தனியே நிற்றலின்றி, இறைவன் அவற்றோடு உடன் உடனாய்க் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/104&oldid=1583157" இலிருந்து மீள்விக்கப்பட்டது