பக்கம்:மறைமலையம் 15.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

73

ஏலாமையால் அவ்வொன்றுக்கும் இரண்டிற்கும் நடுநின்ற இயைபைச் சுட்ட ஒன்றனையும் இரண்டனையும் உணர்த்தாத அத்துவித மெனுஞ்சொல் ஆன்றோரால் அமைக்கப்பட்ட தென்க. இனி இவ்விரற் கூட்டத்திற் பெருவிரலேபிரமமாம், சுட்டுவிரலே ஆன்மா வாம்; இவை இரண்டன் கூட்டுறவே முத்தியாம்; அம்முத்திக் கூட்டுறவே அத்துவிதமுத்தியெனப் பெயர் பெறுவதாம். இங்ஙனம் இச்சின் முத்திரைக்கண் அத்துவித முத்தித்தன்மை சொல்லானன்றி வெறுங்கை காட்டால் அறிவுறுக்கப் பட்டமையினாலன்றோ அக்குருவைச் சுட்டி “எல்லா மாயல்லதுமாயிருந்ததனை யிருந்தபடியிருந்து காட்டிச், சொல்லாமற் சொன்னவரை சொன்னவரை” என்று ஆன்றோர் கூறுவாரா யினாரென்க. இச்சின்முத்திரையின் பொருள் இதுவாதல் உணரமாட்டாதார் இதற்குத் தோன்றிய வாறெல்லாம் வேறுவேறு பொருள்கூறி இழுக்குறுவர். அது கிடக்க.

இனி அத்துவிதம் எனும் அச்சொல்லுக்கு இன்மைப் பொருள் கூறுதலடாதாயினும், உலகுயிர்களெல்லாம் வெறும் பொய்ப்பொருள்களென்று கோடுமாகலின், பிரமம் ஒன்றே சத்தியமாய் உள்ளது; ஏனைய இல்லை எனப்படுதற்கு ஏற்ப அத்துவிதம் என்னுஞ் சொல்லுக்கு இவ்விடத்து மாத்திரம் 'இரண்டின்மை டின்மை' எனப்பொருள் கொள்வேமென ஏகான்ம வாதிகள் கூறுவராலெனின்;-அவர் கூறுவது ஒருவாற்றானும் பொருந்தாமை சிறுமகார்க்கும்விளங்கற் பாலதேயாம். உள் பாருள்களாய் உண்மை அனுபவப் பொருள்களாய்த் தோன்றும் உலகுயிர்களை ள ல்பொருள்களென்றற்குப்

பிரமாணமின்மையானும், சுவேதாசுவதரோபநிடதம்

என்றும்

Sw

ద్వాసుణా

సయుజాసయాఖాస సంద్రక్షలు என்றும் கூறுமாற்றால் ஈசன் அநீசனான ஆன்மா இருவரும் பிறவாதவர் என்பதும், பரமான்மா சீவான் மா என என ஒரே பெயரான் வழங்கப்படும் இருபறவைகள் மாயை என்னும் ஒரே மரத்திலுள்ளன என்பதும் இனிது பெறப் படுதலானும், சுருதி யோடு முரணாமற் கூறவேண்டு மென்னும் அவருரையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/106&oldid=1583159" இலிருந்து மீள்விக்கப்பட்டது