பக்கம்:மறைமலையம் 15.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

திருச்சிற்றம்பலம்

தமிழ் நான்மறையின் தெய்விக உண்மை

வடமொழிக்கண்ணுள்ள நான்மறைபோலத் தமிழ்ப் கண்ணுள்ள

பாஷையின்

நான்மறைகளின் தய்விக வரலாற்றினை இன்றெடுத் துபந்நியசிக்கப் புகுகின்றமையின் இங்ஙனம் இன்று விஷயத்திற்குப் பெயர்தரப்பட்டது. நான்மறை நற்பொருள்கள் எந்தப் பாஷையிலே வழங்கப் பெறுமாயினும், தம்மைக் கேட்பார்க்கும் உணர்வார்க்கும் அவர் நெஞ்சினை உருகச்செய்து அவர் அறிவினைக் கரைத்துச் சிவானந்தப் பேற்றினைப் பெறுவிக்கும் நலம் உடையனவாம். அற்றாயினும், அவை தாம் தாம் வழங்கப் பெறும் பாஷையின் இயற்கை யமைதியழகானும் ஒருசிறப்பு எய்தப்பெற்றுத் தம்மைப் பயில்வார் அறிவோடு ஒற்றுமைப் பட்டு எளிதிலே அனுபவிக்கப் படுந்தன்மைய வாய்ப் பொலிவடையும். உலகத்திலே பரந்து பட்டுக் கிடக்குந் தொள்ளாயிரம் பாஷைகளுள் ஒரு பகுப்பு நாரிகேள பாகத்தினும், ஒருபகுப்புத் திராட்சபாகத்தினும் பொருந்து வனவாய் இருக்கும். வேனிற்காலத்து வழிச் செல்வான் ஒருவன் இடையே பசியானுந் தாகத்தானும் மிக வருந்தி ஆண்டு ஒருசார் உயர்ந்துள்ள ஒரு தென்ன மரத்தின்மேற் பிரயாசையுற் றேறி அதன்றலையிற் காய்த்துத் தொங்குங் குலையுட் பருங்காய் ஒன்றைப் பறித்துக் கொண்டு கீழ்இறங்கி அக்காயின்மேல் மட்டைகளை யெல்லாம் உரித்தெடுத்துப் பின் ஓட்டையும் ஓட்டையும் உடைத்துக்களைந்து உள்ளிருக்குந் தண்ணீரை யருந்திப் பருப்பை யுண்டு, பசிதாகம் தீர்வது கண்டாமன்றே! அதுபோல்வதோர் அமைதியுடைய பாஷை நாரிகளே பாகம்பற்றி வந்ததொன்றாம். தென்னமரம் தன்மாட்டுள்ள தேங்காயினை எளிதிலே பறித்துக் கொள்ள ஏலாவாறு மிகஉயர்ந்து நிற்றல்போலத் தன் கண்ணுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/108&oldid=1583161" இலிருந்து மீள்விக்கப்பட்டது