பக்கம்:மறைமலையம் 15.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

முன்பனிக்கால உபந்நியாசம்

77

இப்பரதகண்டத்துட் புகுந்த காலத்துத் தமக்கெதிரிலே மிகவும் நாகரிகவழக்கடைந்து பிரகாசிக்கும் தமிழ்ப்பாஷை யினைக் கண்டு அதிலுள்ள இலக்கணஇலக்கிய அமைதிகளை யெல்லாம் பார்த்துத் தமது ஆரியபாஷையினை நூல் வழக்கிற்கு ஏற்றவிதமாகத் திருத்தி அங்ஙனம் எல்லா நலங்களும் பொருந்தத் திருத்தப்பட்ட தென்னுங்காரணம் இனிதுதோன்ற சமஸ்கிருதம்' என்னும் பெயருஞ் சூட்டினார். இங்ஙனந் திருத்திச் செய்யப்பட்ட சமஸ்கிருத பாஷை நிரம்பவும் பிரபலமாய் வழங்கவே, இதற்கு மூல மொழியான ஆரிய பாஷை இறந்து பட்டது. நூல்வழக்கி னுள்ளே நிரம்பவும் பிரபலப்பட்டு வந்த சமஸ்கிருத பாஷையின் எழுத்தின்சப்த பேதங்கள் அவற்றைத் திருத்த மாய்க் கற்றோரானன்றி, மற்றை ஆண்மக்களானும் பெண் மக்களானும் பிள்ளைகளானும் உச்சரிக்கவாராமையால் சமஸ்கிருதபாஷை எஞ்ஞான்றும் உலகவழக்கிற் பயின்று வந்ததேயில்லை. அதுகற்றோர்க்குரிய நூல்வழக்கின் மாத்தி ரம் பயின்று வருவதாயிற்று. இவ்வாறு மூலமொழியான ஆரியம் இறந்துபட்டமையானும், அதனின்றுந் தோன்றிய சமஸ்கிருதம் உலகவழக்கிலின்றி நூல்வழக்காய் மாத்திரம் இருந்தமையானும் சமஸ்கிருத பாஷையினைக் கற்போர் மிகவும் இடர்ப்படுவா ராயினார். உயிரெழுத்துக் களிலே ரு லு வென்னும் உயிர்மெய் யெழுத்துக்களைப் ருடலு பிறழவைத்தும், க் ச் ட் த் ப் என்னும் வல்லொற்றுக்களை க் ட் மனிதர்க்கு இயற்கையேதோன்றும் உச்சாரணஇலேசாற் கூறாது அவை யொவ்வொன்றனையும் எடுத்தும்,படுத்தும்,

நலிந்தும் உச்சரித்துச் செயற்கையான் வேறு வேறு

மூன்றெழுத்தாக்கியும், கீழ்வாய்ப்பல்நுனியை நாவின் நுனி இயற்கையே பொருந்தத் தோன்றும் ஸ் என்னும் ஒலியைச் செயற்கைப்படுத்து அந்நாவின் நுனியைக் கீழ்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்தவைத்துச் சரித்து எனும் எழுத்தாக்கியும், அந்நா நுனியை மேல்வாய் அண்ணத்தைப் பொருந்த இலேசாக வையாது அடர்த்தி அழுத்திவைத்துச் சரித்து ஷ் எனும் எழுத்தாக்கியும், இவ் ஷ் க் என்னும் இரண்டெழுத் தையுங் கூட்டி க்ஷ் எனும் ஓர் எழுத்தாக்கியும் ங்ஙனம் எழுத் திலக்கணம் எல்லாம் இயற்கையாய் ஓதற்கும் உணர்தற்கும் பொருத்தமின்றிச் சமஸ்கிருதபாஷையிலே அமைக்கப்

ஷ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/110&oldid=1583163" இலிருந்து மீள்விக்கப்பட்டது