பக்கம்:மறைமலையம் 15.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

❖ 15❖ மறைமலையம் – 15

பட்டிருக்கின்றன. இனிச்

சொல்லிணக்கமோ

வெனில்

ஒவ்வொரு பெயரும் வினை யும் ஒருமைபன்மை என்பன வற்றை இயற்கையே உணர்த்தும் தமிழ் முதலான பாஷைகளிற் போலாது, ஒருமை, இருமை, பன்மை என்ப வற்றை உணர்த்தும் விகுதிகள் பல உடையனவாய்த், தமிழ் முதலான இயற்கைப் பாஷைகளில் உயர் திணையில் ஆண் பெண் பலர் எனும் பாற்பகுப்பும் அஃறிணையில் ஒன்று பல என்னும் பாற்பகுப்பும் அமைந்தவாறு போலாது சமஸ்கிருத மொழிகள் ஒவ்வொன்றும் உயர் திணையில் ஆண் பெண் பாற்பகுப்பை உணர்த்துவதன் மேலும் அலிப்பால் ஒன்று ணர்த்தியும், அஃறிணையில் ஒருநியதியுமின்றி அறிவில்லாத கல், மண், பழம், பூ, மேகம், சடல் முதலியவற்றிற்கும் ஆண் பெண் அலி என்னும் பாற்பகுப்பு ஒரு பிரயோசன முமின்றி யுணர்த்தியும் இவ்வாறு அவற்றையெல்லாம் உணர்த்தும் அளவிறந்த விகுதிகளையுடையதாயிருக்கின்றது. இனி வாக்கிய அமைதி களோ வென்றாற் குணம், தீர்க்கம், விருத்தி முதற் பல திறப்பட்ட சந்திகளுடையனவாயும் பலபொருட்கு இடந் தருவனவாயும் பொருள்மயக்கம் மிகுதியுமுடையன வாயும் இவ்வாக்கியப் பொருளை நிச்சயித்தற்கு மீமாஞ்சை முதலான சாத்திரக் கருவியினை இன்றியமையாது வேண்டி நிற்பன வாயும் இருக்கின்றன. இனி இவ்விடர்ப்பாடெல்லாம் மிகமுயன்று நீக்கிக்கொண்டு போய்ச் சுலோகங்கள் விருத்தங்கள் முதலான பாவகைகளை ஓதும் வழியும் மெல்லென்ற ஓசையின்பந் தோன்றாதுக்ச்ட்த்ப்என்னும் சுதாத்த, அநுதாத்த, சுவரிதம் என்னும் வல்லோசை வேறு பாடுகள் மிக விரவியும் ஸ்ஷ்ஹ் க்ஷ் முதலான அனுகரண ஒலிகள் மிக விரவியும் அவை ஓதுவார்க்கும் உணர்வார்க்கும் சித்தவிருத்தியினை ஒடுக்கி அவர்ஆன்ம அறிவினை நெகிழச் செய்து அவ்வறிவின்கண்

றிச்சுரந் தொழுகும் இன்பத் தினைப் பயக்கமாட்டாவாய், அச்சித்த விருத்தியினை மிகுதிப்படுத்திக் குரோதங் கோபம் உக்கிர முதலான தாமத குணங்களை எழுப்பி விடுகின்றன. இங்ஙனஞ் சமஸ்கிருத பாஷை உலக வழக்கின்கண் உச்சரித்து வழங்குதற்கு ஏலாமை யினாலே நூல்வழக்கின் மாத்திரம் பயிலப்படுவ தொன்றாகை யால் அதில் உள்ள ஒவ்வொரு சொற்களும் புதிதுபுதிதாக கற்கற்பாலவா யிருத்தலாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/111&oldid=1583164" இலிருந்து மீள்விக்கப்பட்டது