பக்கம்:மறைமலையம் 15.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

79

கற்குமிடத்தும் எழுத்துசொல், சொற்றொடர், பா என்னும் வகைகளாற் பெரிதும் இடர்ப் பாடுடைய நாரிகேள்பாக அமைதி யுடையதாய் இருத்த லாலும் அவ்வடமொழிக்கண் நான்மறைகள் சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவுடையார்க்குச் சிறிதும் பயன்படுவனவல்லாம். இதுபற்றியன்றே,

உள்ள

“கல்வி, கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீர்பிரித்துப் பாலுண் குருகிற் றெரிந்து”

என்று அறநூலும் விதிப்பதாயிற்று.

இனித் தமிழ்ப்பாஷையோவெனின் எல்லா மனிதர்க்கும் இயற்கையில் எழும் பன்னீருயிரெழுத்துக்களும் பதினெண் மெய்யெழுத்துக்களும் இலேசாக அமைந்த எழுத்திலக் கணமும், இரு திணையைம்பான் மூவிடங்களை யுணர்த்துஞ் சொல்லிலக் கணமும் இவற்றாற் றொடுக்கப் பட்டுப் பொருள் எளிதிலே புலப்படுக்குஞ் சொற் றொடரிலக்க ணமும், நீர்மடையிற் தெளிந்தநீர் நிரம்பி மொழு மொழு வென் றொழுகினாற்போன்ற செய்யுள் ஓசையின்ப முடைத் தாய் இப்பரதகண்டத்துள் ஆரியம் வருதற்கு முன்னும் இமய முதற்குமரியீறாக நடைபெற்றதாய், அது வந்தபின்

சமஸ்கிருத முண்டாவதற்குச் சகாயம் பலபுரிந்து அதனோடு உடன் அளவளாவி அவையிரண்டும் வழக்குவீழ்ந்தபின்னும் நடைபெற்று இன்றுகாறும் வழங்குவதாய் விளங்கா நிற்கின்றது. து நன்றுவிளக்கும் பொருட்டே தத்துவ சாத்திர பண்டித ரான சுந்தரம்பிள்ளை

“பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருண் முன்னிருந்தபடியிருப்பதுபோற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/112&oldid=1583165" இலிருந்து மீள்விக்கப்பட்டது