80
❖ - 15❖ மறைமலையம் – 15
ய
என்று வைத்துக்கூறினார். இங்ஙனந் தமிழ் உலக வழக்குடைய தாய் நடைபெறுகின்றமையின் அப்பாஷையின் சொற்கள் பெரும்பாலன நம்மால் வருத்தமின்றி அறியப்பட்டன வாகின்றன. உலகவழக்கில்லாத வடமொழியை நாடொறும் வழுவாமல் முறையாய்க்கற்று அப்பாஷையிற் புலமையடைய வேண்டும். நல்லறிவாளன் ஒருவனுக்குக் குறைந்தது பத்து வருஷங்கள் செல்லும்; இப்படியே நம்முடைய சாதியார்க்குள் வழங்குதலில்லாத ஆங்கில பாஷையினைக் கற்றுப் புலமை யடைதற்குக் குறைந்தது பத்துவருஷஞ் செல்வது எல்லாரும் பிரத்தியக்கமாக அறிந்த உண்மை யேயாம். இனி உலக வழக்கிலுள்ள நமதுசெந் தமிழ்ப் பாஷையைக் கற்றற்கோ மந்த புத்தியுடையானுக்கு ஐந்து வருடமும் தீவிர புத்தியுடை யானுக்கு மூன்று வருடமுமாத்திரம் போதுமானவை யாம். இன்னும் எழுத்துச் சொல்லி லக்கணங்கள் வரையறை யின்றி ஒரு நியதிக்கு அகப்படாது விரிந்த சமஸ்கிருத முதலிய இலக்க ணங்கள் போலாது, தமிழில் தொல்காப்பியம் முதலான அரிய பெரிய இலக்கணங்கள் ஓர்வரம்பு கடைப் பிடித்துப் போதிக்கும் பெருமை நிரம்பினவாம். இது
66
'கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப்பசுந்தமிழேனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும்படுமோ”
என்றும்,
"மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி
இறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
அறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும் வென்றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்”
என்றும் ஆன்றோர் கூறுவாராயினர்.
இனி இதன்கண்ணுள்ள ஓசை யின்பம் மற்றை எந்தப் பாஷையினும் இல்லையென்றதனை வலியுறுத்துவாம். க் ச் த் ச் ப்ட் என்பனவற்றை எடுத்தல், படுத்தல், நலிதலாகிய சுதாத்த அனுதாத்த சுவரிதவகைபற்றி உச்சரிக்கும் வல்லோ சையும், மெல்லோசையினைக் கெடுத்துத் தோன்றும் ஸ, ய, ஷ, ஹ, க்ஷ