பக்கம்:மறைமலையம் 15.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

81

என்னும் அனுகரணக் குறிப்போசையும் தமிழ்ப் பாஷையின்கண் இல்லாமையின் இப்பாஷை முழுவதூஉம் ஓசையின்ப முடைத் தென்பது துணியப்படும். அதுவேயுமன்றித் தனி மெய்யெழுத்துக் களை முதலிற் கொண்டு க்ரமம் ந்யாசம் ப்ரபலம் என்றற் றொடக்கத் தான் வருந்தி யுச்சரிக்கும் முயற்சியின்றி இச் சொற்களை உச்சரிக்க வேண்டி வந்துழியும் அவற்றோடு உயிர் எழுத்துச் சேர்த்துக் கிரமம் நியாசம் பிரபலம் என்பனவாக இலேசாக்கிச் சொல்லும் நெறியு முடைத்தாகலின் தமிழ் ஓசையின்பந் தனக்கே உரித்தாக வுள்ளதென்பது தெற்றென விளங்கும். தமிழ்ப்பாஷை முழுவதூஉம் இங்ஙனம் ஓசையின்ப முடைத்தாய் நடைபெறு மாயினும், இதன்கட் செய்யுட்கள் இயற்றும் நல்லிசைப்புலவர் இப்பாஷையின் கண்ணும் உள்ள வல்லோசையினைப் பெரும் பான்மையான் விலக்கி மெல்லோசை நிரம்பத் தோன்றவே சொற்பொறுக்கி யமைத்துப் பல திறப்பாக்கள் இயற்றுவாரா யினர். ங் ஞ் ண் ந்ம்ன்ய்ர் ல் வ் ழ் ள் ற் என்னும் பதின்மூன் றெழுத்துக்கள் மிகப் பயின்றுவருஞ் சொற்களே தமிழ்ப் பாட்டுக்களிலெல்லாம் பெரும்பான்மையாற் காணப்படுவன வாம். இஃது,

66

அம்மையேயப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவாரமுதே. பொய்ம்மையே பெருக்கிப் பொழுதி னைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்றனக்குஞ், செம்மையே யாய சிவபுரமளித்தசெல்வமே சிவபெருமானே, இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே” என்னுந் திருவாசகத் திருவாக்கினும்,

"தனித்தனி முக்கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சருக்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே, தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின் றனிப்பாலுஞ் சேர்த் தொரு தீம்பருப் பிடியும் விரவி, இனித்தநறுநெய்யளைந் தேயிளஞ் சூட்டினிறக்கியெடுத்தசுவைக் கட்டியினு மினித் திடுந் தெள்ள முதே, யனித்தமறத்திருப்பொதுவில் விளங்குநடத்தர சேயடி மலர்க்கென் சொல்லணி யாமலங் கலணிந்தருளே" என்னும் இராமலிங்க சுவாமிகள் அருளிச் செய்த பாடலினுங் கண்டு கொள்ளப்படும். தமிழ்ப் பாஷையில் இங்ஙனம் நிகழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/114&oldid=1583167" இலிருந்து மீள்விக்கப்பட்டது