* முன்பனிக்கால உபந்நியாசம்
தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும்
ஏமாங்கதமென்றிசையாற்றிசைபோயதுண்டே”
83
எனவருஞ் சிந்தாமணிப்பாட்டுக்களிற் காணப்படும். இவ்வாறு ஓசை யின்பம் பெரிதுடைத்தாய்த்தோன்றும் சிந்தாமணிக்கு எதிர் நிற்கவல்லதான பெருங்காப்பியநூல் தமிழில் பெரிய புராணத்தை யன்றிப் பிறிது காணப் படுவதில்லை. இது,
66
"ஞானத்தின் றிருவுருவை நான்மறையின்றனித் துணையை வானத்தின் மிசையன்றி மண்ணின் வளர்மதிக்கொழுந்தைத் தேனக்கமலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தினெழு பிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்
66
"கடையுகத்திலாழியின்மேன் மிதந்த திருக்கழு மலத் தினிருந்த செங்கண், விடையுகைத்தார் திருவருளால் வெற் பரையன்பாவை திருமுலைப்
பாலோடும்,
அடைய நிறை சிவம் பெருகி வளர் ஞானங்குழைத் தூட்டவமுது செய்த, உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை யடியார் களுரைப்பக்
கேட்டு” எனவரும் பெரியபுராணத் திருவாக்கான் நன்கறியக் கிடக்கும். இனி அன்பே உருவாய் அழுதழுது குழைந்துருகிய மாணிக்க வாசகப்பெருமான் றிருவாய்மலர்ந் தருளிய திருவாக்கு களிலெல்லாம் இந்த
மெல்லோசையின்பம்
நிரம்பித்
துளும்புகின்றது. அது,
“தெளிவளர்வான் சிலை செங்கனிவெண் முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன்னாய் முன்னியாடு பின்யானளவா ஒளிவளர்தில்லை யொருவன் கயிலையுகு பெருந்தேன் றுளிவளர் சாரற் கரந்துங்ஙனேவந்து தோன்றுவெனே”
“யாழுமெழுதியெழின் முத்தெழுதியிருளின் மென்பூச் சூழுமெழுதியோர் தொண்டையுந்தீட்டி யென்றொல்பிறவி ஏழுமெழு தாவகை சிதைத்தோன்றில்லையூரிளமாம் போழுமெழு திற்றொர்கொம்பருண்டேற் கொண்டுபோதுகவே” “விழியாற்பிணையாம் விளங்கியலான் மயிலாம் மிழற்றும் மொழியாற் கிளியாம் முதுவானவர்தம் முடித்தொகைகள்