முன்பனிக்கால உபந்நியாசம்
யாதோசிறந்த தென்குவிராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேந்
திருவாசக மிங்கொருகா லோதிற் கருகன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி யன்ப ராகுகநரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே
87
என்று சிவப்பிரகாச சுவாமிகளும் அருளிச் செய்வாராயிற்று. இனி, இம்மெல்லோசை யின்பத்தோடு, அன்பு மயமாய் நிற்றலின் இத்தெய்வச் செந்தமிழ்ப்பாஷை பிரணவ சொரூ பமாயிருக்குமென்பதூஉங் காட்டுவாம். ஆகாயத்தின் இயற்கைச் சத்தமாய் எல்லாச் சத்தபேதங்களுந் தோன்று தற்கு முன் விளங்காநின்ற சூக்கும ஓசையாய் இருப்பது ஓ என்னும் பிரணவ நாதமேயாம். இது செயற்கையாயெழுஞ் சத்த பேதங்களை யெல்லாந்தடுத்துச் சங்கைக் காதில் வைத்துக் கேட்பின் இனிது புலப்பட்டு விளங்கும். இப்பிரணவ நாதத்தின்கட் குறிப்போசை வல்லோசைகள் சிறிதுமின்றி மெல்லோசையே தோன்றுதல் அனுபவத்தால் இனிதுணரப் படுவதேயாம். இங்ஙனம் மெல் லோசை மாத்திரையே சொரூப மாகவுடைய பிரணவத்தின் தூல காரிய சப்த சமூக மே தமிழ்ப் பாஷையாமென்பது அத்தமிழ்ப் பாஷையின் கண்ணுள்ள மெல்லோசை யின்பத்தால் இனிது துணியப்படும். தமிழும் மெல்லோசையே சொரூபமாகவுடையது; பிரணவமும் மெல்லோசையே சொரூபமாகவுடையது; ஒன்று தூலகாரிய மாம் ஒன்று சூக்கும காரணமாம். இங்ஙனந் தமிழும் பிரணவமும் தூலசூக்கும பேதத்தால் இரண்டாயும், பொதுமை யான மெல்லோசை வகையால் ஒன்றாயும் நிற்கு மென்றறியப் படும். இங்ஙனம் பிரணவம் தமிழ்ப் பாஷைக்கே இயற்கை யுரிமையுடைத் தென்பது சமஸ்கிருத முதலிய எல்லாப் பாஷைகளினும் அஃது 'ஓ' என்னுந் தமிழ் எழுத்தால் எழுதப் பட்டு வழங்குதலே சான்றாம். இன்னுஞ் சப்தத்தைக் குறிக்கும் ஓசை ஒலி என்னுஞ் சுத்தச்செந்ததமிழ்ச்சொற்கள் என்னும் அப்பிரணவ
வவ