முன்பனிக்கால உபந்நியாசம்
91
னுள்ளும் மெல்லோசைப்பட நிற்கும் த் என்னும் எழுத்தை நிறுத்தினார்.
இனி ம் என்னும் எழுத்து
மெல்லோசையினைக்
குறிப்பதாம். மெல்லெழுத்துக்கள் ஆறனுள் இதனை மாத்திரம் எடுத்ததென்னை யெனின்; - ம் என்பது குழந்தைப் பருவத்து இயற்கையாய் முதலிற் றோன்றும் மெய்எழுத்தாக லானும், அது பிரணவத்தின் ஈற்றில்நிற்றலானும் அதுவே அங்ஙனம் நிறுத்தப்படுதற்கு இயைந்ததாகும்.
இனிழ் னி ழ் என்னும் எழுத்து இடையோசையினைக் குறிப்ப தொன்றாம். இடையெழுத்துக்கள் ஆறனுள் ழ் என்பதனை மாத்திரம் எடுத்ததென்னை யெனின்; - ஏனை ஐந்திடை யெழுத்தோசைகள் எல்லாப் பாஷைகளுக்கும் பொதுவாய் நிற்ப இவ்ழ் ஒன்றுமே தமிழுக்குச் சிறப்பெழுத் தாய் நிற்றலானும், தமிழின்கண் மெல்லோசை யின்பத்திற்கு இஃது இன்றியமை யாதாய் முன்னிற்றலானும் இதனை யெடுத்தா ரென்க.
னித் தமிழ்ப்பாஷையின்கண் ஸ ய ஷ ஹ முதலான குறிப்போசையின்றாகலின்
மெல்லோசையினையேயிரு வகைப்படுத்து ஒன்றை மெல்லோசை எனவும், அம்மெல் லோசையினும் இன்னும் மெல்லென்று சுருங்கி இசைக்கும் ஒலியை இடையோசையென்றும் நிறுத்தி வல்லோசை ஒன்றுங்கூட்டி மெய்யோசை மூன்றென்பாரா யினார். தமிழின் கண் இராசத குணத்திற்குரிய குறிப்போசை யில்லாமை யான் அதனை யொழித்துச் சுத்தசத்துவ குணத்தினையே ஏற்றக் குறைச்சல்பற்றி இருவகைப்படுத்து இடையோசை யினைக் குறிக்கும் ழகரத்தைச் சுத்தசத்துவ குணத்திற்கும், மெல்லோசை யினைக் குறிக்கும் மகரத்தை அதனிற் சிறிது குறைந்த சத்துவ குணத்திற்கும் தகரத்தைத் தாமதகுணக்கலப்புச் சிறிதுடைய சத்துவ குணத்திற்கும் அடையாளங்களாக நிறுத்தினார். தமிழ் முழுவதூஉஞ் சத்துவ குணத்தையுடைய பாஷை யாகலின் ழகரம் சத்துவத்திற் சத்துவமா மென்றும், மகரம் சத்துவத்தில் இராசதமா மென்றும், தகரம் சத்துவத்தில் தாமதமா மென்றும் அறியற் பாற்று.
ய