92
❖ 15❖ மறைமலையம் – 15
இன்னும் இத்தமிழ் என்னும் மாழியில் ழகரம் சுத்தசத்துவ கு ணத்திற்கடையாளமாக லின் அதனையு யிரெழுத் தோடு சேராது தனியேயிறுதிக்கண் நிறுத்தி யருளினார். த் ம் என்னும் ஏனையிரண்டும் இராசததாமதக் கலப்புடையன வாகலின் அக்குணங்களின் ஆற்றலை மெலிவித்தல் வேண்டி அ, இ என்னுஞ் சுத்தவயிந்தவமான பிரணவ எழுத்துக்கள் கலந்து நின்றனவென்க. எழுத்துக்கலவா முன் மெய் மய் யெழுத்துக்கள் தாங்
க
உயிர்
காண்டிருந்த அரைமாத்திரை யினையும், அவை கலந்த மாத்திரையானேயிழந்து அவ் வுயிரெழுத்துக்களின் சொரூப மாய்நிற்கும் என்னுந் தமிழிலக்கண நுட்பத்தை உற்று நோக்குமிடத்து தம் என்னுந் தாமத இராசகுணக்கலப்புடைய சத்துவ எழுத்துக் கள் அ, இ என்னும் பிரணவ உயிரெழுத்துக் களைக் கலக்கப் பெற்றமை யானே தமக்குள்ள அவ்வசுத்த குணக் கலப்பு நீங்கிச்சுத்தசத்துவ வெழுத்துக்களாய்நிற்கும் என்பதூஉம், அவையங்ஙனம் நிற்கவே தமிழ்ப்பாஷை முழுவதூஉஞ் சுத்தசத்துவ குண சொரூபத்தையுடையதா மென்பதூஉம் நன்று தெளியப்படும்.
அற்றேல், த் என்ற வல்லோசையினை முதலில் வைத்துக் கூறிய தென்னையெனின்; ஓர் ஒலிதோன்றும் போது தோன்று மிடத்தே வல்லென்றெழுந்து வரவரச் சுருங்கித் தூரத்திலுள் ளார்க்கு மெல்லென்றிசைக்குமாகலின் அம்முறையே வல்லென் றிசைக்குந் தகரத்தை முன்னும், அதனிற்சுருங்கி மெல்லென் றிசைக்கும் மகரத்தை அதன் பின்னும், அதனினுஞ் சுருங்கி மெல்லென்றிசைக்கும் ழகரத்தை யிறுதிக்கண்ணு மாகவைத் தோதினார். இலௌகிக முறையிலே தாமத குணவயப்பட்டுச் செல்லும் நமது சித்தவிருத்தியினைச் சிறிது சிறிதாக ஒடுக்கிக் காண்டுபோய்ச் சுத்தசத்துவத்திலே நிறுத்துவது தமிழ் மொழியாமென்பதனையும் அம்முறை தெரிப்பதாயிற்று. இங்ஙனந் தமிழ்பாஷையின் நுட்பங்கள் பலவும் அதன் பெயர்க்கண்ணே தொகுத்தடக்கிச் செய்தமையின், தமிழ் தெய்விகத்தன்மை பெரிதுடைய பிரணவமொழியா மென்பது தெற்றெனத் தெளியப்படும். இவ்வுண்மை யுணர்த்துதற்கன்றே திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் அருளிச் செய்த முதற்பதிகத்தின் முதன் மொழியாய் நின்ற 'தோடு' என்பதன்
ய