பக்கம்:மறைமலையம் 15.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

93

கட் பிரணவ எழுத்தான ஓகாரத்தை த் என்னும் தமிழ்ப்பெயர் முன்னின்ற எழுத்தின்கட் சேர்த்துச் சரித்து அப்பிரணவம் தமிழுக்கே சிறப்பாக உரித்தென்பது காட்டியருளினார்.

இனி இத்துணைப்பெருமையுந் தமிழுடைத்தாதல் பற்றியே இராமலிங்கசுவாமிகள் “இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசைசெல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகலேசு டையதாய்ப்பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை யுடையதாய்ச் சாகாக் கல்வியை லேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற்கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர் என்றருளிச் செய்வாராயினர்.

இங்ஙனந் தெய்விகத்தன்மையுடைய செந்தமிழ்ப் பாஷை யிலேயுள்ள தேவார திருவாசகங்களாம் நான் மறைகள் பொற் கலத்திற் பெய்து நிரப்பிய இனிய பாலமிழ்தம்போல் பெரிதும் பயனுடைத்தாம், வடமொழிக் கண்ணுள்ள நான்மறைகள் மட்கலத்திற்பெய்துநிரப்பிய பால்போல் எல்லார்க்கும் பயன்படுதலுடைத்தன்றாம். அதுநிற்க.

னி வடமொழி நான்மறைகள் கன்மகாண்டம் உபாசனா காண்டம் ஞானகாண்டம் என முத்திறப்பட்டு பசுமேதம் பரிமேதம் முதலியகன்மபாகங்களையே மிக விரிப்பனவும், முப்பத்தாறுதத்துவங்களுட்பட்ட ப்ருதிவ் யோபவ ஆபசர்வ அக்நேருத்ர வாயுர்ப்பீம என்றற் றொடக்கத் தனவாக இந்திரன் பிரமன் முதலிய காரிய மூர்த்தி களை மிகவும் உபாசிப்பன வுமாய்க்கொண்டு, தத்துவங்கடந்த பிரமவிசாரணையைச் சிறுபான்மையே சொல்வதாம். இனித் தமிழ் நான்மறை களோவெனின் முப்பத்தாறு தத்துவங்களின் மேற்பட்டு விளங்கும் சிவம் என்னும் முழுமுதற்பொருளையே உபாசிக்கும் ஞான காண்டப் பொருளொன்றேயுடையனவாம். இந்தஞான காண்டமும் ஆகமவழியால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நாற்றிறப்பட்டு நிற்கும். இது தாயுமான

சுவாமிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/126&oldid=1583180" இலிருந்து மீள்விக்கப்பட்டது