பக்கம்:மறைமலையம் 15.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 15

“விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானநான்கும் அரும்புமலர்காய்கனிபோலன்றோபராபரமே"

என்றருளிச்செய்தமையானும் இனிது விளங்கும். ஆகவே, ஞானத்திற் சரியையைக் காட்டும் தாசமார்க்கத்தை யுணர்த்துதற் பாருட்டுத் திருநாவுக்கரசு சுவாமிகளும், ஞானத்திற் கிரியையை யுணர்த்தும் புத்திரமார்க்கத்தை விளக்குதற் பொருட்டுத் திருஞானசம்பந்த சுவாமிகளும், ஞானத்தில் யோகத்தை யுணர்த்தும் சகமார்க்த்தை விளக்குதற்பொருட்டுச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஞானத்தில் ஞானத்தை யுணர்த்துஞ் சன்மார்க்கத்தை விளக்குதற்பொருட்டு மாணிக்க வாசக சுவாமிகளும் அவதரித்தருளினார் என்க.

6

6

என்றிதுகாறும் விளக்கியவாற்றான் தமிழ்ப்பாஷை யொன்றே சத்துவகுண ஓசை புலப்படுத்திப் பிரணவாகார மாயிருத்தலால் இப்பாஷை தெய்விகத்தன்மை யுடைய தென்பதும், இப்பாஷையின்கண் சமயாசாரியர் திருவாய் மலர்ந்தருளிய தேவார திருவாசக அருந்தமிழ் மாமறைகள் இதில் அமைதரப்பெற்றமையானே ஒருபெருஞ் சிறப்புப்பெறுவ வாயினவென்பதும், வடமொழிநான்மறைகள் சத்துவ வோசை யின்மையோடு பலதிறப்பட்ட காரியப் பிரமோ பாசனை வலியுறுத்தி நிற்றலின் அவை பரப் பிரமசுத்தகாரண சிவபரம் பொருளை மாத்திரம் வலிபெறக் காட்டும் தமிழ்நான் மறைகளோடு ஒப்புப்பெறாவென்பதும், எனவே தமிழ்நான் மறைகளாம் தேவார திருவாசக மாட்சி அளப்பரிதா மென்பதும் இனிது பெறப்படும் என்க. ஓம் சிவாயநம: ஓம் சிவாயநம: ஓம் சிவாய நம:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/127&oldid=1583181" இலிருந்து மீள்விக்கப்பட்டது