98
❖ 15❖ மறைமலையம் – 15
“பெற்றசிற்றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் றுந்தீபற”
“பேரின்ப மான பிரமக் கிழத்தியோ டோரின்பத் துள்ளானென் றுந்தீபற உன்னையே யாண்டானென் றுந்தீபற
எனுந்திருவாக்குகளெழுந்தன.
وو
இனி ஏகான்மவாதம், சத்தப் பிரமவாதம், கிரீடாப் பிரமவாதம் பாற்கரியவாத மென்னும் கேவலாத்துவிதவகை பற்றிப் பரமான்மாவாகிய பிரமம் ஒன்றேயுள்ளதென்றும், அதுவே சரீரங்கடோறும் வேறு வேறு ஆன்மாக்கள்போல அவினயித்தலல்லது சீவான்மா என வேறோர் அறிவுப் பொருளில்லையென்றும், சீவான்மாப் பொய்யான மாயையின் வயத்தால் உண்டாகும் பிராந்திஞானத்தைக் கழித்துத் தன் உண்மைச் சொரூபத்தைப் பிரமமென்றே நிச்சயப்படுத்திக் கொள்ளுமிடத்து அப்பிரமத்தின் சுதந்திரகுணமாக ஆனந்த மயமாயே விளங்குமென்றும், இப்படிக் காண்டலே யோக மல்லது அதற்குச் சீவான்ம பரமான்ம ஐக்கிய நிலை என்று பொருளுரைப்பது பொருந்தாதென்றும் கூறினாலோவெனின்; யோகம் என்னுஞ் சொற்பொருளுக்கு இக் கேவலாத்துவிதக் கொள்கை ஒருவாற்றானும் பொருந் தாமையானும், சருவ வியாபகப் பரம்பொருளாயுள்ள பிரமம் ஏகதேச சுபாவலக்ஷண முடைய சீவான்மா வாகுமென்றல் அனுபவ, விரோதமாயிருத்த லானும், அல்லதவ் வாறாகு மென்று கொள்ளுதற்கு ஓர் காரணம் இல்லாமை யானும், மாயையே பிரமத்தை அவ்வாறு ஏகதேசப் படுத்து மெனின் சருவசத்தியு முடைய பிரமத்தைக் காட்டிலும் வெறுஞ் சூனியப் பொருளான மாயை பேராற்ற லுடைத்தாம் என்று பெறப்பட்டு பறப்பட்டு முன்பின் முரணாய் முடிதலானும், முன்னே சத்தி குவிந்து மாயையின் வயப்பட்டு நின்ற பிரமம் திரும்பவும் ஒரு காலத்து அதனைச் செயித்துத் தன் சுதந்திரவுரிமையைக் கைக்கொள்ளுமெனின் அத்தகைய ஆற்றலுடைய அப்பிரமம் முன்னமே அவ்வாறு அதனைச் செயித்துச் சீவத்தன்மை எய்தாது நிற்றல் அமையுமாகலானும்,