முன்பனிக்கால உபந்நியாசம்
103
விலக்கணமுடைய வேறுவேறு பொருள்களா மென்றே துணியப்படும். இதற்குப் பிரமாணம்.
66
L
"அப்பினிற் கூர்மை யாதித்தன் வெம்மையா லுப்பெனப் பேர்பெற் றுருச்செய்த தவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்து ளடங்குமே'
எனுந் திருமந்திரத்துட் காண்க.
இனிச் சீவன் சிவத்தோடு பொருந்தல் வேண்டுவது என்னை என்று விசாரிக்குமிடத்துச் சிவானந்தப்பேற்றின் பொருட்டாகவே யல்லது வேறில்லை என்பது முன்னே விளக்கப்பட்டது. எங்கெங்கு இருவர்க்குள்ளே கூட்டுறவு உண் L டாகுமோ அங்கெல்லாம் ஆனந்த விளைவுண்டா மென்றும், எங்கெங்கே ஆனந்த விளைவில்லையோ அங்கெல்லாம் அவ்விருவர் தமக்குள்ளும் பிரிவினையே நிகழுமென்றும் அறிதல் வேண்டும். நேசகுணம் என்பது இருவரையும் ஒருவராக ஒட்டுவித்து ஆனந்தத்தை விளைவிப்பதன்றி வேறென்னை? விரோத குணம் என்பது அவ்விருவர் தமக்குள்ளும் அவ்வானந்தம் நிகழ வொட்டாது தடைசெய்து அவர் தம்மை வேறுவேறாகப் பிரிவிப்பதன்றி வேறென்னை? பேரறிவினாற் சிறந்த ஒரு பெரியாரைக் கண்டவிடத்து அவர்பாற் சென்று அவர் கூறும் அரிய பெரிய விஷயங்களை உணர்ந்து அவரோடு அளவளாவி இன்புறுதற்கு எம்மனம் மிக விழைகின்றது. அறிவில்லாரைக் கண்டவிடத்து அவர்பாற் செல்லுதலால் யாது துன்பம் உண்டாமோ என்றஞ்சி அவரை விட்டுப் பிரிந்து போவதற்கு மிகவும் விரும்புகின்றோம். இதனால் நேசகுணம் உண்டாவதற்கு ஒருவரிடத்துள்ள அறிவுவிளக்க மாகிய ஞானமே இன்றியமையாது ன்றியமையாது வேண்டற்பாலதா மென்பதூஉம், விரோத குண முண்டாவதற்கு ஒருவரிடத்துள்ள அஞ் ஞானமே காரணமா மென்பதூஉம் இனிதுவிளங்கும். அறியாமை வயப்பட்டுப் பிறப்பு இறப்புக்களென்னும் பெருந் துக்க சாகரத்திலே கிடந்து அலையும் எம்போல்வார்க்குப் பேரறி வாளரைக் கண்டால் அவரோடு அளவளாவுதற்கு மனவெழுச்சி யுண்டாதல்போல, எல்லா ஞானத்திற்கும் ஓர் நிலைக்களனாய் உள்ள சருவேசுவரன் ஒருவன் உண்டாகலின்