* முன்பனிக்கால உபந்நியாசம்
105
பிறந்தும் வருவதனை எல்லாங் காணும்போதும் இங்ஙனஞ் சருவத்தையும் அமைத்த சருவ சக்தியுமுள்ள சருவஞ்ஞனான ஈசுரனுடைய பேரற்புதஞானம் யாங்காணுமிடத்துங் கேட்கு மிடத்தும் உண்ணுமிடத்தும் உணருமிடத்துமாகிய எல்லா ங்களினும் புலப்பட்டுத் தோன்றுதலை இனிது விளங்கக் காண்கின்றேம் அல்லேமோ! இங்ஙனம் இறைவனுடை ஞானசக்தி அண்டபிண்ட சராசரங்கள் எல்லாவற்றினுள்ளும் புலப்பட்டு விளங்குதல் பற்றி யன்றே திராவிட சுருதியுள்ளும்,
'இருநிலனாய் தீயாகி நீருமாகி யியமானனாயெறி யுங்காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகியாகாசமாய ட்டமூர்த்தியாகிப் பெருநிலையுங் குற்றமும் பெண்ணுமாணும் பிறருருவுந்தம்
முருவுந்தா மேயாகி
நெருநலையாயின்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள்
என்றும்
“நிலனீர்நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
நின்றவாறே’
புலனாயமைந்தனோடெண் வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகேழெனத் திசைபத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவாதோணோக்கமாடாமோ'
وو
ய
என்றும் திருவாக்குகள் எழுந்தன. இனிக்கீர்வாண சுருதி யுள்ளும்
సృధివ్యో భవ ఆపశ్చర్య
అగ్నేరుద్రోవాయు సృమలాకాశస్యమహాదేవలతావ:పసుపతికి సూర్య పొ
என்று பெறப்பட்ட வாக்கியத்தினால் இவ்வுண்மை வலியுறுத் தப்பட்டது.
இங்ஙனம் ஞானாகரனான ஈசுரன்றன்மை அறிவு குறைந்தார் முதல் அறிவுமிகுந்தார் ஈறான எல்லா மக்களானும் நன்கறியக் கிடத்தலின், அவனுடைய ஞானப் பிரகாசத்தினைத் தாமும் பெற்று இன்புறல்வேண்டி எல்லாரும் விழைவுடைய ராய் இருக்கக் காண்கின்றோம். இதனால் ஞானம் காரணம் ஞானத்தின்காரியம் இன்பம் அல்லது ஆனந்தம் என்றறியற் பாற்று. இது