பக்கம்:மறைமலையம் 15.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் - 15

“பாராதிபூத நீயல்லை யுன்னிப்பாரிந் திரியங் கரணநீயல்லை யாராயுணர்வுநீயென்றான் ஐயனன் பாயுரைத்த

சொல்லானந்தந் தோழி”

என்றெழுந்த திருவாக்கினாலும் நன்குணர்த்தப் பட்டது. இன்னும் அறிவுடையோராற் குறிக்கப்பட்ட நூற் பொருள் களை அறியுமிடத்தும், யான் தேகமுமல்லேன் பஞ்சேந் திரியங்களு மல்லேன் அவற்றை யியக்கும் மனம் சித்தம்புத்தி அகங்கார மென்னும் அந்தக் கரணங்களு மல்லேன் இவற்றின் வேறான பிராணனும் அல்லேன் இவற்றின் வேறாய்ச் சச்சிதானந்த சொரூபியாய் விளங்கும் பிரமமே நான் என்று அறியுமிடத்தும் முறையே தோன்று கின்ற பாசஞான பசுஞானங்களானும் ஆனந்தம் விளையு மாயினும், அவ்வானந்தங்களெல்லாம் ஏகதேச ஞானங்களாற் றோன்றிய ஏ கதேச ஆனந்தங்களே யாமல்லது, பதி ஞானத்தான் மாத்திரம் பெறப்படுவதாய்த் தனக்கோர்வரம் பின்றி விரிந்த

வியாபகத்ததான சிவானந்தத் தோடு அவை ஒப்புப் பெறா வாகலானும், அவையும் ஒரு சிலகணங்கள் மாத்திரமே நிலை பெற்றழிவனவாமாத லானும் அவை யெல்லாம் கழிக்கப்ப டுவனவேயா மென்பதூஉம், சிவானந்த விளைவிற்கோ ரொப் பற்ற காரணமான பதிஞானமே யாவரானும் விரும்பற் பால தொன்றாமென்பதூஉம்,

“பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும்

பார்ப்பரியபரம்பரனைப்பதி ஞானத்தாலே நேசமொடு முள்ளத்தே நாடிப்பாத நீழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதி னாசைதரு முலகமெலாமலகைத் தேராமென் றறிந்த கலவந்நிலையே யாகும்பின்னும் ஓசைதரு மஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க வுள்ளத்தே புகுந்தளிப்ப னூனமெலாமோட' “வேதசாத்திரமிருதி புராண கலைஞானம்

விரும்ப சபைவை கரியாதித் திறங்கண் மேலா நாதமுடிவான வெல்லாம் பாசஞான

நணுகியான் மாவிவைகீழ் நாடலாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/139&oldid=1583193" இலிருந்து மீள்விக்கப்பட்டது