முன்பனிக்கால உபந்நியாசம்
“அசித்தருவியாபகம் போல்வியாபக மருவமன்றாய் வசித்திட வரும்வியாபியெனும் வழக்குடையனாகி நசித்திடா ஞானச் செய்தியநாதியே மறைத்துநிற்கும் பசுத்துவ முடையனாகிப்பசுவென நிற்குமான்மா”
என்னுந் திருவாக்கானும்,
66
ஆணவத்தோடத்துவிதமான படி மெய்ஞ்ஞானத் தாணுவினோடத்துவிதஞ் சாருநாளெந்நாளோ
109
என்பதனானும் அறியற்பாலதாம். கேவல சகல சுத்தம் என்னும் மூன்றவத்தையுள் எல்லாக் கருவிகளோடுங்கூடி அறிவுவிளங்கப் பெறுகின்ற இச்சாக்கிராவத்தையிலேயே மறதி முதலிய அறியாமைக்குணங்கள் எல்லார்க்கும் உண்டாதல் துணியப் படுதலானும், இக்கருவிகளின் இயக்கம் முறை முறையே குறைந்து ஒடுங்குகின்ற சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளில் அவ் வறியாமைக் குணம் முறைமுறையே மிகுந்துபோய் இறுதிக் கண்ணின்ற துரியா தீத அவத்தையில் ஆன்மாக் கேவலம் அறியாமை வயப்பட்டுப் பாம்பு தீண்டவரினும் வாளறுக்க நேரினும் ஒன்றுந் தோன்றாமற் பிணம் போற் கிடத்தல் ஒருவனயர்ந் துறங்கும் உறக்கத்தே காணப்படுத லானும் அறியாமைக் குணத்தைச் சய்யும் இவ்வாணவம் ஆன்மாக்களெல்லாரி டத்தும் உண்டென்பது பிரத்தியக்கமாக அறியப்படுவதாம்.
இனி ஐக்கவாதசைவர் மதம் பற்றிப் பிரகாசத்தின் சூனியமே அப்பிரகாசத்தைச்செய்யும் அந்தகாரமாயினாற் போல ஆன்மாவின் 6 ஞானசூனியமே அறியாமையினைச் சய்யும் ஆணவமாமெனின்;- அபாவமான சூனியப் பொருளுக்குக் குணமுந்தொழிலு மில்லையாம் எனத் தருக்க சாத்திரியாரான அன்னம்பட்டரும் உரைகூறினாராகலின் சூனியப்பொருளாயின் அந்தகாரத்திற்குக் கருமைக்குணமுங் கண்ணை மறைக்குந் தொழிலும் இலவாதல் வேண்டும். அவையிரண்டும் அவற்றிற்குண்மை பிரத்தியக்கமாகத் துணியப் படுதலால் அவர் கூறிய அந்தகார உவமை ஒரு சிறிதும் பொருந் தாமையானும், முன் ஒரு சூனியமாய்க் கிடந்த ஆன்ம ஞானசத்தி பின் ஒருகாற்றோன்றுமென்றல் சற்காரிய வாதங்கூறுஞ் சாங்கிய