பக்கம்:மறைமலையம் 15.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

❖ - 15❖ மறைமலையம் – 15

பௌதிகசாத்திர விரோதமா மாக லானும், ஆணவத்திற்கு அறியாமைக் குணமும் அறிவை மறைக்குந் தொழிலுங் காணப் படுதலால் அது ஞான சூனிய மான அபாவப் பொருளா மென்றற்கு ஒருசிறிதும் ஏலாமை யானும் அவர் கூறும் அவ்வுரை பொருந்தாதென்பது நன்கு பெறப்படும்.

6

சைவர்மதம்பற்றி

இனிப்பாடாணவாத ஆணவம் அறியாமைக்குணத்தினையுடைய ஓர் தனித்திரவிய மாத லின்றி, ஆன்மாவின்கணுள்ள ஞானத்தைப்போல் அஃது அதற்கு மற்றொரு குணமாமெனின்; - குணத்தையுடைய ஒரு திரவியத் திற்கும் அவ்வாறே குணத்தையுடைய மற்றொரு திரவியத்திற்கும் இடையே நிகழும் சம்பந்தம் சையோக சம்பந்தமெனவும், ஒருகுணத்திற்கும் அக்குணத்தையுடைய பொருளுக்கும் பிரிவின்றியுள்ள சம்பந்தம் தாதான்மிய சம்பந்தமெனவும் வழங்கப்படும். திரவியத்திற்கும் திரவியத் திற்கும் இடைநிகழும் சையோகசம்பந்தம் ஒருகாலத்துப் பிரிதலுமுண்டென்பது கடல்நீரைக் காய்ச்சியவிடத்து நீரும் உப்பும் வேறு வேறாகப் பிரிந்து கிடத்தலினாற் காணப் படுதலானும், ஒரு திரவியத்திற்கும் அதன்குணத்திற்குமுள்ள தாதான்மிய சம்பந்தம் அவ்வாறு பிரிக்கப்படுவதன்றென்பது உப்பும் அதன்குணமான உவர்ப்புச் சுவையும் வேறுவேறு தனித்து நில்லாமையின்கண் வைத்துக் கண்டு கொள்ளப் படுதலானும்,

ஆணவம் ஆன்மாவிற்கு ஒருகுண மாயின் அஃது

அதனினின்றும் எஞ்ஞான்றும் பிரிக்கப்படா தாகல் வேண்டும். இனி, அறியாமைக்குணம் சிறிது சிறிதாகத் தேய்ந்துபோதல் மனிதப்பருவ மொவ்வொன்றினுங் காணப்படுதலால், அஃது ஆன்மாவோடு தாதான்மிய சம்பந்த முடைத் தென்று கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதாம். ஆகவே, ஆணவம் ஒரு திரவியமாய் ஆன்மாவோடு அநாதிசையோகம் உற்றுநிற்கு மென்பது பெறப்படும். இனி இவை யிரண்டின் சையோகம் ஒருகாலத்து நிகழ்ந்ததெனின் அதற்கு முன் அறிவுமயமாய் நின்ற ஆன்மாவினை அஃதொரு காலத்து வந்து பற்றுதற்குக் காரணம் பெறப்படாமை யானும், அங்ஙனம் பற்றுதற்கும் அஃதறிவில்லாத அசேதனப் பொருளாகலின் அது முடியாமை யானும், ஆன்மாவே யதனைப்பற்றியதெனின் ஆனந்தமயமாய் விளங்கும் சிவத்தைப் பற்றாது அஃதவ்வாணவ வல்லிருளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/143&oldid=1583197" இலிருந்து மீள்விக்கப்பட்டது