பக்கம்:மறைமலையம் 15.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

111

பற்றுதற்குப் பிறிதோர் காரணமின்மையானும், அங்ஙனம் அதனைப் பற்றுதலே ஆன்மாவினியற்கையெனின் பின் எக்காலத்தும் அது சிவத்தைப் பற்றாதொழிய வேண்டுமாக லானும், சிவமே அவையிரண்டனையும் அங்ஙனம் பொருத்திய தெனின் அறியாமையினை யான்மாவின் கட் பொருத்துதல் சிவத்திற்குக் கருணையின் றென்பதுபட்டு அஃதவன் இறை மைக்கு இழுக்காமாதலானும் பாரிசேட வளவையான் அவை யிரண்டும் அநாதிசையோக முடைத் தென்பது துணியப்படும். இது,

“நெல்லிற்குமியும் நிகழ்செம்பினிற் களிம்பும்

சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன் மமன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்க மலத்தாம்.”

“ஒன்றதாய நேகசத்தியுடைய தாயுடனாயாதி யன்றதாயான்மாவின் றன்னறிவொடு தொழிலையார்த்து நின்றுபோத்திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற் களிம்பேய்ந் தென்றுமஞ்ஞானங் காட்டுமாணவமியைந்து நின்றே”

என்னுந் திருவாக்குகளானு மறியப்படும். இங்ஙனம் ஆன்மா வோடு அநாதிசையோகமுற்று நிற்கும் ஆணவ மறைப்பே ஆன்மாச்சிவத்தோடு பொருந்தா திருந்தமைக்குக் காரண மாம்.

இனி, ஆன்மாவின் அறிவை ஏகதேசப்படுத்தி அணுத் தன்மைப் படுத்திவந்த ஆணவமலத்தின் வலியை இறைவனு டைய அனுக்கிரக சத்தியானது பிறவிகடோறும் ஒடுக்கிக் கொண்டு அவ்வான்மசிற் சத்தியினை முறைமுறையே விளங்கச் செய்து உபகரித்து வருகின்றது. இந்த மனிதப் பிறவியில் மாத்திரம் பிறசென்மங்களுக் கில்லாத பகுத்தறிவு காணப் படுதலால், இப்பகுத்தறிவின் முயற்சியால் ஒருவன் அவ் வனுக்கிரக சத்தியின் பெருந்துணையை நிலை பெறுவித்துக் கொண்டு ஆணவத்தைச் செயித்துச் சிவானந்தத்திற்றோயு மாற்றைக் காட்டுவதே சிவராஜயோக மாம். கரு நெல்லிப்பழம் தன்னை யுண்டானுக்கு நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு களை நீக்குமாயினும் அதன் பெருமையை யறியாது அது பழுத்துத் தொங்கும் மரத்தின் பக்கத்தே நாடோறும் வசிப்பானொருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/144&oldid=1583198" இலிருந்து மீள்விக்கப்பட்டது