பக்கம்:மறைமலையம் 15.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

113

என்னுந் திருவாக்குகளாம். இவ்வைந்து சரீரங்களு மறித்தும் ஓர்வகையால் அன்னமயகோசம் பிராணமயகோசம் மனோ மயகோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமயகோசம் என ஐவகைப்பெயரானும் வழங்கப்பெறும். இவை முறையே பால் நுரைபோலவும் பாம்புரிபோலவும் நுண்ணிய ஆடை போலவும் தெளிந்த பளிங்குபோலவும் தெளிவில்லாக் கற் போலவும் அதி சூக்கும சூக்குமதர சூக்கும தூல் தூலதரமாய் ஒன்றினொன்று நுண்ணியதாயிருக்கும். இதற்குப் பிரமாணம்,

"மருவானந்தம் விஞ்ஞான மனோபிராணன் மைய

முருவாந் தன்மையுண்டாய் முனொன்றுக்கொன்று சூக்குமமாய் வருமாமன்ன மயம்பற்றி மாயை முதற்காரணமாகும்

அருவாயான் மாவைங்கோசத்தார்ப்புண்டவற்றின கம்புறமாம்.’

முதலில் ஒரு கற்சுவரானும், அதன்பின் தெளிவான ஒருபளிங்குச் சுவரானும், அதன்பின் மிக மெல்லியது ஓர் ஆடை யானும், அதன்பின் பாம்புரிபோல்வதோர் பொரு ளானும், அதன்பின் பால்நுரை போல்வதோர் பொருளானும், வளைக் கப்பட்ட ஒரு வீட்டின் நடுவில் ஒருவன் இருந்தாற் போலக், கற்சுவர் போன்ற தூலதேக உறையும் பளிங்குச்சுவர் போன்ற சூக்குமதேக வுறையும், மெல்லாடை போன்ற குணசரீர வுறையும், பாம்புரி போன்ற கஞ்சுகசரீ ரவுறையும், பால்நுரை போன்ற காரண சரீரவுறையுமாகிய ஐவகையுறை யினையுங் கவித்துக் கொண்டு சீவான்மா வசிக்கின்றது. வசிக்கின்றது. இங்ஙனம் வகுக்கப்பட்ட அன்னமயகோசமென்கிற தூல சரீரத்தின் கண்ணின்று ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சாக்கிரம் என்றும், பிராணமய கோச மென்கிற சூக்குமசரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சொப்பன மென்றும், மனோமய கோசமென்கின்ற குண சரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சுழுத்தி என்றும், விஞ்ஞான மயகோச மென்கிற கஞ்சுக சரீரத்தில் அதனறிவு விளங்கப்பெறுகின்ற அவசரம் துரியம் என்றும், ஆனந்தமய கோசமென்கின்ற காரண சரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியாதீத மென்றுஞ் சொல்லப் படும். சீவான்மா ஆணவமல வயப்பட்டுத் தன்சூக்கும அறிவுத் தன்மையிழந்து தூலரூபமாய் நிற்றலால் அதன் அறிவை மெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/146&oldid=1583200" இலிருந்து மீள்விக்கப்பட்டது