பக்கம்:மறைமலையம் 15.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

117

அக்கினி யாம்.

அம்மூலாதாரத்தின் கட்டோன்றும் இவ்வக்கினியே இத்தேகம் நிலைபெறுதற்கு இன்றி யமை யாததொன்றாய் விளங்குகின்றது. இங்ஙனமான இப் பிண்ட சரீரத்திற்கு அக்கினி ஒரு காரணமாய், அவ் வக்கினிக்குப் பிராணவாயு ஒரு காரணமாய், அப்பிராண வாயுவுக்கு அக் குண்டலி சத்தி ஓர் காரணமாய், அக் குண்டலி சத்திக்கு நடராச தாண்ட வ நடனம் என்கின்ற அருட்சத்தி வியாபாரம் இறுதிக் கண்ணின்ற தாரக காரணமாய் அமையுமென்க. இவ்வாறு இவ்வண்டத்தும் பிண்டத்தும் வியாபரிக்கும் திருவருட் சத்தியின் வியாபாரம் ஒப்ப ஒரு பெற்றித்தாய் விளங்குதலாலன்றே,

66

"இடைபிங்கலை யிமவானோ டிலங்கை நடுநின்றமேரு நடுவாஞ் சுழுமுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமமே

“நாடரு நடுவினாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணா மன்னுமம்பலமொன் றுண்டங் காடுது மென்று மென்றா னென்னையா ளுடையவவையன்'

“இடம்படு முடம்பின்மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் நெடுங்குழ லோசையாகி நிலவுமவ் வோசை போயங் கடங்கிய விடமே யென்று மாடுமம்பலமதாகும்”

என்னும் உண்மைத் திருவாக்குகள் எழுந்தன.

இன்னும் இப்பிண்டத்தின்கண் நடைபெறுகின்ற இவ் வருட் சத்தி வியாபாரமெல்லாம் நுண்ணறிவினரான ஆங்கில நன்மக்களாற் செய்யப்பட்ட கைக்கடிகார யந்திர அமைதி யோடு ஒத்து நிற்றல் பெரிதும் வியக்கற் பால தொன்றாம். கைக்கடிகார யந்திரத்துள் சாவியினால் முறுக்கப்படும் சுழல்வில்லே குண்டலி சத்தியாம்; அச்சுழல் வில்லின் விரிவால் திருப்பப்படுகின்ற ஆறு சக்கரங்களுமே குண்டலி சத்தியின் இயக்கத்தால் இயங்குகின்ற மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறாதார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/150&oldid=1583204" இலிருந்து மீள்விக்கப்பட்டது