பக்கம்:மறைமலையம் 15.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

“யானே தும்பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கென் கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயுமலர்க்கொன்றைச் சிவனேயெம்பெருமானெம் மானேயுன்னருள் பெறுநாளென்றென்றே வருந்துவனே"

66

'காடுங்கரையு மனக்கு குரங்கு கால்விட்டோடவதன் பிறகே ஓடுந்தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவாயுயிர்க்குயிராய் ஆடுங்கருணைப்பரஞ்சோதி யருளைப் பெறுதற்கு அன்புநிலை தேடும்பருவமிதுகண்டீர் சேரவாரும்செகத்தீரே”

என்று அருளிச் செய்ததூஉமென்க.

அம்

119

இனி இத்தூல தேகத்தின் கட்டோன்றும் அறிவு முயற்சிகளைப் பரக்கவிட்டால் அறிவு முதிர்ச்சியுண்டா காது. முயற்சிகளைக் குவித்து ஒருவழியாக்குவித்தால் அறிவுமுதிர்ச்சி யுண்டாகின்றது. ஒருயாற்றிற் பெருகிவரும் பெருவெள்ளத்தை இடையிலே மறித்துக் கரைஎழுப்பினால் அது தன்பேராற்றலால் அக்கரையினை யுடைத்துக் கொண்டு அப்புறம்போம். அவ் யாற்றின் இருபக்கத்தும் பலவாய்க்கால் நெடுகவெட்டுவித்து அத்தண்ணீர்ப் பெருக்கை அவற்றிற் போக்குவித்தால் அத்தண்ணீர் வேகமும் ஆற்றலும் அடங்கி அழிந்துபோகின்றன. அதுபோல, ஆன்மாவின் அறிவு முயற்சிகள் பஞ்சேந்திரியங் களாங் கால்வாய்களின் வழிச் சென்று வீணே அழிந்து போகின்றன. அம்முயற்சிகளை அவ்வாறன்றி ஒருவழிப் படுத்துவேமாயின் அவையெல்லாம் ஒருங்குதிரண்டு நம் அறிவை மிகுதிப் படுத்துமென்பதில் ஐயமென்னை?

இனி இச்சரீரத்தின்கண் இயங்கும் பிராணவாயு இவ்வறிவு முயற்சிகட்கெல்லாங் காரணமாயிருத்தலால் அதனை வெளிவிடுதல், உள்ளிழுத்தல், உள்நிறுத்தல் என்னுங் கிரியை யினையுடைய இரேசக பூரககும்பகங்களாம் பிராணா யாமத்தால் அதனைத் தன்வயப்படுத்தும் ஹட யோகாப்பியாசம் குருமுகமாகவன்றிச் செயற்பாலதன்றா கலானும், அங்ஙனஞ் செயும்வழியும் அதுபெரியதோர் வருத்தத்தினை விளைவிப்ப தல்லது நுண்ணறிவு முதிர்ச்சி யினைப் பயவாதாகலானும் அம் முறை கொள்ளற் பாலதன்றாம். பிராணவாயுவாகிய காரணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/152&oldid=1583206" இலிருந்து மீள்விக்கப்பட்டது