பக்கம்:மறைமலையம் 15.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

129

அவ்வழியே அவ்வான்மாக்களை மேன்மேல் எழச்செய்து தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் சிவானந்தப் பெருந்திப்பிய சாகரத்திற்படிந்து அவ் வானந்தசத்தி மயமாயே நிலைபெற்று நிற்கும்படி செய்து போதருகின்றது. இங்ஙனம் ஆன்மாக்கள் உயிர்க் உயிர்க் குயிராய் நின்று உபகரித்துவரும் பிராணசக்தியின் உபகாரத்தை நன்கறிந்து அவ்வுபகாரம் தம்மால் வீணே செலவு செய்யப்படாமல் அதனைத்தடுத்து ஆன்மாக்கள் தமக்கே உரிமையாக்கிக் கொள்ளும் முறையே பிராணா யாமம் என்று சொல்லப்படுவதாம். ஆன்மாக்கள் முழுமுதற் கடவுளைச் சென்றணுகி அதனின் வேறற நிற்றலே யோகமா மென்பது.

"இந்தியவிடயந் தன்னொடு சிவணல் யோகமென் பார் சிலர் சிலர் தாஞ், சிந்தனை சிவத்தோ டடைதல்நல் யோக மென்பரீ தன்றியுஞ் சிலர் தாம், முந்திய பிராண ன்பானனோ டடைத லென்பரிம் மொழிந்தவை யனைத்தும், அந்த மில்யோகமல்ல நற்சீவன் பரத்துடனடைவதே யாகம்.” என்னுந் திருவாக்கால் துணியப்படும். எனவே, இப்பெற்றித் தாகிய யோகத்திற்குப் பிராணாயாமம் என்பது இன்றியமை யாத அங்கமாம்.

இனி ஒருவன் தன்னிடத்தமைந்த பிராண சத்தியை மனம் வாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாலும் தான் வேண்டிய வாறெல்லாஞ் சென்று பல திறத்தாற் செலவு செய்து அப்பிராண சக்தியினாற் பெறும் அரும் பெரும் பயனை இழந்து போகாமல், அத்திரி கரண செயல்களையும் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எண்வகைப்பட்ட முறையால் தடுத்துத் தனக்கே

சுதந்தரமாக்கி வலிவுறு மாகலின்

யோகாங்கங்கள் எட்டும் பிராணாயாமம் என்று ஒரு சொல்லால் வழங்கல் இழுக்கா தென்க. ஆயினும், அவை எட்டும் ஒன்றினொன்று வேறான கிரியைகள் பல உடையன வாயிருத்தலால் அவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு பெயரான் வழங்கப்பட்டன. வ் வண்வகை யோகாங் கங்களுள் பிராணாயாமத்தை L மாத்திரம் பிராணாயாமம் என்று சிறப்பித்துக் கூறியவாறென்னையெனின் உலகத்தில்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/162&oldid=1583216" இலிருந்து மீள்விக்கப்பட்டது