முன்பனிக்கால உபந்நியாசம்
131
இடைவிடாது வீணே செலவு செய்குவனாயின் இவை தம்மை நடைபெறுவித்து உபகரிக்கின்ற பிராண சக்தியின் உபகாரச் சயல் இவனுக்குச் சுதந்தரமன்றாய் ஒழியும். இவன் அதனைச் சுதந்தரப்படுத்திக் கொள்ளுங்காறும் இடை டையறாது வரும் பிறப்பிறப்புத் துன்பங் களிற் கிடந்து உழலுவன். ஆகவே, மனம் வாக்குக் காயம் என்னும் மூவகைக் கருவிகளின் வழியே நடைபெறுகின்ற ஆன்ம இச் சாஞானக் கிரியைகளை அடக்கும் யோகாங்க முறையே இயமம், நியமம் என்று வகுக்கப்பட்டன. பிற உயிர்களைக் கொல்லுதலும், நடவாததொன்றைப் பிறர்க்குத் தீமை பயப்பச் சொல்லுதலும், பிறர் பொருளை அபகரித் தலும் அபகரிக்க எண்ணுதலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளானும் வரைதுறையின்றி விரும்பப் பட்ட பொருள் களைப் பெற இச்சித்தலும் தெய்வத் தன்மை பொருந்திய பிராண சக்தியின் உபகாரத்தை வீணாக் குதலாய் முடியுமாகலின் அவை தம்மை அங்ஙனம் நடக்க வொட்டாமல் தடுக்கும் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, வெஃகாமை, ஐம்பொறி யடக்கல் என்னும் ஐந்து அறங்களும் இயமம் என்று வகுக்கப்பட்டன. தவம், தூய்மை, தத்துவ நூலூணர்ச்சி, மனம் உவந்திருத்தல், தெய்வ வழிபாடு என்னும் ஐந்தும் நியமம் என்று வகுக்கப் பட்டன.
இனிச்சரீரத்தின் வழிச் செல்லுகின்ற நடத்தல், இருத்தல், கிடத்தல், எழுதல், வளைதல் என்னும் ஐவகைக் கிரியைகளும் தாம்வேண்டியவாறே நிகழச்செய்வராயின் ஆன்மாக்கள் பிராண சக்தியின் உபகாரத்தை வறிதாக்கினார் ஆவர். ஆகவே, தாம் மேற்கொண்ட நல்லொழுக்கமுறைக் கேற்பத் தேகச் செய்கையைத் திருத்திக் கொள்ளும் உபாயம் ஆசனம் என்னும் யோகாங்கத்தின்பாற்படும். மற்றுத்தாம் மேற் கொண்ட பெருஞ் செயல் மன அமைதியேயாகலின், அம்மன அமைதிக்கு இயைந்ததாகப் பலவகையால் அமர்ந்திருக்கும் ஆசனம் என்னும் தேகக்கிரியை மாத்திரம் தழுவிக்கொண்டு மற்றைத் தேகக் கிரியைகளை யோகநூலார் விலக்கினார். ஆயினும், ‘ஒன்றின முடித்தல் தன்னினம் முடித்தல்' என்னும் நியாயத்தால் மற்றைத் தேகக் கிரியைகளைத் தடைசெய்து திருத்திக்
ய