பக்கம்:மறைமலையம் 15.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ 15❖ மறைமலையம் - 15

கொள்ளுதலும் இவ்வாசனம் என்னும் யோகாங் கத்தின் கண்ணே அடங்கப் பெறுவதாகும்.

இனிப் பிராணாயாமம் என்பது பிராண வாயுவைத் தடைசெய்து நிறுத்திச் சரீரத்தைச் சுகமாக வைத்துத் தாம் வேண்டுங்காலமளவும் ஆயுளை நீட்டிப் பித்தலும், பயன் பெறுதற்குச் சாதனமான தேகத்தை இங்ஙனம் வலிபெறச் செய்யும் வாயிலாய் மன ஒருமை எய்துவித்தலுமாகும். ஆ ன்மாக்களின் அறிவு விருத்திக்கு இத்தேகம் இன்றி யமையாச் சாதனமாவதாம். படலத்தான் மறைக்கப்பட்ட கண்ணுக்குக் கண்ணாடி சகாயமாய் நின்று கண்ணறிவை விளக்குதல்போல, ஆணவம் என்கின்ற குற்றத்தான் மறைக் கப்பட்டு அறிவு மழுங்கிய ஆ ன்மாக்களுக்கு அவ்வறிவை விளக்குவது மாயாகாரியமான இவ்வுடம்பேயாம். இது, "மாயாதனு விளக்கா மற்றுள்ளங்காணேதேல் ஆயாதா மொன்றையதுவதுவாய் - வீயாது

வன்னிதனைத் தன்னுண் மறைத்தொன்றாங் காட்டம்போல் தன்னை மலமன்றணை தறான்.”

“எழுமுடல் கரணமா தியிவைமலம் மலம்மலத்தாற் கழுவுவனென்று சொன்ன காரணமென்னை யென்னிற் செழுநவையறுவைசாணி உவர் செறிவித்தழுக்கை முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன்முன்னோன்” “நித்தமாய ருவாயேக நிலையதாயகி லத்துக்கோர் வித்துமாய சித்தாயெங்கும் வியாபியாய் விமலனுக்கோர் சத்தியாய்ப் புவனபோகந்தனுகரணமு முயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயைமயக்கமுஞ் செய்யுமன்றே என்றற்றொடக்கத்துத் திருவாக்கான் நன்கு தெளியப்படும்.

و,

இனி இத்துணைச் சிறந்த சாதனமான இவ்வுடம்பின் நிகழ்ச்சியெல்லாம் புறத்தே காணப்படும் இப்பிரபஞ்ச நிகழ்ச்சி களோடு சம்பந்தப்பட்டே நடைபெறுவனவாகும். றுவனவாகும். இங்ஙனம் இப்பிரபஞ்சமும் இதனோடொற்றுமைப்பட்டு நடைபெறும் சரீரமும் ஒன்றோடொன்று மிக்க சம்பந்த முற்று நிற்றலால் இப்பிரபஞ்சம் அண்ட சரீரம் என்றும் இவ்வுடம்பு பிண்ட சரீரமென்றும் ஒற்றுமைப் பெயரான் வைத்து வழங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/165&oldid=1583219" இலிருந்து மீள்விக்கப்பட்டது