134
❖ - 15 மறைமலையம் - 15
கொண்டு செல்லுகின்றதென இக்காலத்துப் இக்காலத்துப் பௌதிக சாத்திரிகள் மிக நுட்பமாக ஆராய்ந்துரைகூறி வருகின்றார். இவர்கள் இதுகண்டு சொல்லுதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே நம் இந்திய தேசத்துச் சிவராஜயோகிகள் இதனைக் கண்டு கூறியிருத்தலால் நம் முதுமக்கள் யோகானுபவ அறிவு தன்னிகரில்லாத் தன்மைத்தென்பது சொல்லவும் வேண்டுமோ? சூரியநாடி சந்திர நாடி யிரண்டினும் ஒரே தன்மையான மின்சாரம் ஓடுமாயின் இத்தேகத்தின் உள்ளமைந்த கருவிகள் ஒன்றும்நிலைபெற மாட்டா வாய் ஒழியும். அங்ஙனம் அன்றிப் பிராணசக்தி என்னும் எம் அம்மையின் அனுக்கிரக இயக்கத் திறத்தினாலே, சூரிய நாடியிற் செல்லுஞ் சத்தி உடன்பாட்டு வகையாலும் சந்திரநாடியிற் செல்லுஞ் சக்தி எதிர்மறை வகையாலும் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு மாறிமாறி வரும் சுவாச ஓட்டத்தின் இயல்பைத் தெளிவாய் அறிந்து புறத்தே அண்டத்திலிருந்து அகத்தே பிண்டத்தினுட் சல்கின்ற பிராணவாயுவை முறை தவறாமல் நடத்தித் தேகத்தைப் பாதுகாத்தலே பிராணாயாமத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நோக்கத்தை அறிந்து அனுட்டியாமையி னாலன்றோ உலகத்தில் வருடந்தோறும் கணக்கிறந்த மக்கள் நோய் வாய்ப்பட்டுத் தம் அரிய சரீரத்தை இழந்து போகின்றனர். இப் பிண்ட சரீரத்தை வகுத்த இறைவனது திருவருட் குறிப்பானது இதனை நெடுநாள் நிலை குலையாமல் வைத்து பகரிக்க வேண்டு மென்பதேயாம். அவன் இதில் ஒழியாது இயங்கும் வண்ணம் அமைத்த பிராணசக்தியின் தோற்றமே அவனது திருவருட் குறிப்பை நன்கு புலப்படுத்து கின்றது. இத்தேகத்தில் எவ்வகைப் பட்ட நோயும் அணுகாமல் வைக்கத் தகுந்த பிராணவாயு இயக்கமும், மற்ற நிகழ்ச்சிகளும் இடையறாது நிகழாநிற்ப, இச்சரீர மாத்திரம் அவ்வாறு இடை டையில் யில் அழிந்தொழியக் காரணமில்லை யன்றோ? ஆ! மக்கள் வ்வமைதிகளைச் சிறிதாயினும் உணராமையினா லன்றோ தம் அருமைத் திருமேனியைத் தம்நோக்கம் ஈடேறுமுன் துறக்கின்றனர்!
ப்
உலக
'நோய்' என்பது யாது? அஃது ஒரு தனிப்பொருளா? இல்லை, இல்லை. பிருதிவி, அப்புத், தேயு, வாயு, ஆகாய முதலான தத்துவங்களின் தூல சூக்கும காரியங்களான அகக்