பக்கம்:மறைமலையம் 15.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

❖ 15❖ மறைமலையம் – 15

பகற்காலத்தும், சந்திரசத்து வியாபிக்கும் இராக்காலத்தும் அனுட்டிக்கற் பாலனவாகிய சுவாச முறைகள் பெரிதுங் கவனிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில், புறத்தே அண்டத்திற் காணப்படும் சீதோஷ்ணங்கள் அகத்தே பிண்டத்திற் சென்று தாக்கு மாகலின், அகத்தே சீதோஷ்ணங்களைச் சமம்பெற வைத்தற் பொருட்டுப் புறத்தே நிகழும் சிதோஷ்ண நிலைகளைக் கவனித்துச் சுவாச ஓட்டத்தைச் செம்மை செய்வித்தல் வேண்டும். சரீரத்தில் உஷ்ணம் மிகுதிப்பட்டால் இரத்தக் காதிப்பு மிகுதியாய் இரத்தக் குழாய்கள் இரத்த சயங்களிற் செல்லும் இரத்தம் பொங்கியும் சுவறியும் நிலைகுலைந்து இசைவுகெட்டு அழியும். சீதம் மிகுதிப் பட்டால் இரத்த ஓட்டங் குறைந்து போதலோடு அவ்விரத்தம் ஆங்காங்குக் கட்டிகட்டியாய் உறைந்து இறுகி அங்ஙனமே இசைவு கெட்டுப்போம். அவ்விரத்தத்தோடு கலந்து செல்லும் வாயு மிகுதிப்பட்டால் இரத்தக் குழாய்கள் அளவுக்குமேல் பருத்துக் கருவிகள் ஒன்றோடொன்று தாக்கி அங்ஙனமே நிலைகெட்டு அழியும். ஆகலின், இரத்தத்தை எப்போதுஞ் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுதலே தேகம் நிலைபெறுதற் குரிய வழியாம். அவ்விரத்தம் சுத்திகரிக்கப் படுதற்கு அதனோடு கலந்து செல்கின்ற பிராணவாயுவே முக்கியக் காரணமாம். அப்பிராணவாயு செவ்விதின் தடைபெறுதற்கு அதிலேறுகின்ற சீதோஷ்ண சத்துக்களே காரணமாம். இச்சீதோஷ் ணங்களைச் சமம்பெற நிறுத்திக் கொள்ளுதற் பொருட்டே தேரையர் என்னும் வைத்திய சாத்திரியார் “இரண்டடக் கோம் ஒன்றை விடோம் இடது கையிற் படுப் போம்” என்று இரவுக் காலத்து இடது கைப் பக்கமாய்ப் படுத்தலைச் சிறந் தெடுத்துக் கூறினார். இடது கைப் பக்கமாய்ப் படுத்தலினால் வரும்பயன் என்னை எனின்;- இடதுகைப் பக்கமாய்ப் படுத்திருக்குந் துணையும் பிராணவாயு சூரியநாடியி லியங்கிக் காண்டிருக்கும்.

சூரியனில்லாத இரவுக் காலத்தே அண்ட சரீரத்தில் உஷ்ண சத்துக் குறைந்திருத்தலினால், அதனோடு சம்பந்தமுள்ள இப்பிண்ட சரீரத்தும் அவ்வாறே உஷ்ணங் குறைந்து சீதம் மிகுதிப்படும். ஒன்று குறைந்து ஒன்று மிகுதிப்படுதலே சரீர நிலைகெட்டு நோய் உற்பத்தி யாதற்குக் காரணமென்பது “மிகினுங் குறையினும் நோய் செய்யும் நூலோர், வளி முதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/169&oldid=1583223" இலிருந்து மீள்விக்கப்பட்டது