பக்கம்:மறைமலையம் 15.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

❖ - 15❖ மறைமலையம் – 15

இனி இப்பெற்றித்தாகிய பிராணாயாமஞ் செய்யத் தொடங்குங்கால் இடது நாசியில் தொடங்கல் வேண்டும். இவ்வுண்மை யறியாத மேற்றிசை விஞ்ஞானிகள் சிலர் வலது நாசியில் தொடங்கல்வேண்டுமெனப் பிறழக் கூறுகின்றார். மகதைசுவரிய சிவராஜ யோகிகளான திருமூலர்

“ஏறுதல் பூரக மீரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம் மாறுத லொன்றின்கண் வஞ்சகமாமே'

என்றும்

66

“வாமத்தி லீரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத்திரண்டு மிரேசித்துக்

காமுற்ற பிங்கலைக் கண்ணாக விவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க வுண்மையே”

என்றும் திருவாய்மலர்ந்தருளினமையால் வாம பாகத்தி லுள்ள சந்திரநாடியிலேதான் பிராணாயாமம் தொடங்கற் பாலதாம். பிறசான்றோரும்

"மதியிலிருநான்கிரேசித்து வகுத்தவீரெட்டினிதேற்றி விதியின்வழுவாதெண்ணான் குகும்பித்திலகுவெய்யோனிற் பதினாறளவைவிடல்விலத்து மிவ்வாறியற்றிப்பகர்முறையின் கதிர்கான்மதியின்விடுதலொரு பிராணாயாமங்கருதுகவே”

என்று கூறியதூஉங் காண்க.

இனி அங்ஙனம் தொடங்கும் வழி எட்டு மாத்திரையளவு து நாசியினால் வாயுவைக் கழித்துப் பதினாறு மாத்திரை உள்ளிழுத்து முப்பத்திரண்டு மாத்திரை உள் நிறுத்திப் பதினாறு மாத்திரை வலது நாசியினால் வாயுவைக் கழிக்க வேண்டும். பின் வலது நாசியினால் அங்ஙனமே பதினாறு மாத்திரை பூரித்து முப்பத்திரண்டு மாத்திரை கும்பித்து இ டது நாசியினாற் பதினாறு மாத்திரை இரேசித்தல் வேண்டும். இடது நாசியில் வாயுவை இரேசிக் கும்போது சூரியனைத் தியானித்தலும், வலது நாசியில் வாயுவை இரேசிக்கும் போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/171&oldid=1583225" இலிருந்து மீள்விக்கப்பட்டது