140
❖ 15❖ மறைமலையம் – 15
சக்தியானது மிகுதிப்பட்டு இச் சரீரத்தை வலிபெறச் செய்து ஆன்ம ஞானத்தைச் சாலவும் மிகச் செய்யும். இது
66
6
'மூவகையணுக்களுக்கும் முறைமையால் விந்துஞானம் மேவினதில்லையாகில் விளங்கிய ஞானமின்றாம் ஓவிடவிந்து ஞானம் உதிப்பதோர் ஞானமுண்டேற் சேவுயிர் கொடியினான் றன்சேவடி சேரலாமே
என்னுஞ் சிவஞானசித்தித் திருவாக்கான் இனிதுணரப் படும். இன்னும் எந்தநூல் சிலசொல்லிற் பலபொருள் அறிவுறுக் கின்றதோ அந்த நூல் தன்னைப்பயிலும் ஆன்மா வின் பிராண சக்தியினை மிகச் செய்யும். இது, மிகச் சுருங்கிய நூலைப் பயில்வோனுக்கு ஆழ்ந்த சிந்தனையும் இன்பமும் உண்டாதலும், மிகவிரிந்த நூலைப் பயில்வோனுக்குச் சிந்தனை யில்லாமல் இளைப்புண்டாதலும் பிரத்தியக்க மாகக் காண்டலின் சுருக்க மான நூலுக்கு விரிந்தநூல் சிறிதும் இணையாகமாட்டாதென்க. இதனாலன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தெய்வத் திருக்குறள் நூலைப் "பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள லெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ” என்று சிறந் தெடுத்து ஏனை எந்த நூலும் இதற்கு இணையாக மாட்டா தென்று தெளிவுபெற எடுத்தோதினார் என்க.
ஆகவே, தம்கண்ணுள்ள பிராணசக்தியை மிகுவித்தற் பொருட்டுப் பிராணாயாமஞ் செய்யும் அறிஞர் பல சொற்கள் பலப்பலவாய்ப்பேசச் சிறிதும் இடந்தராமல் மௌனஞ் சாதித்தலும், யோகாப்பியாசஞ் செய்யுங் காலங் களிலெல்லாம் ஒரே சொல்லிற் றம்சிந்தனையை நிறுத்திப் பலகால் உச்சரித்துப் பிராணசக்தியை மிகுவித் தலுஞ் செய்து போதரு கின்றார். மேலும், ஒரேசொல்லிற் சிந்தனையை நிறுத்த நிறுத்த, ஒருவரை துறையின்றி ஓடிப் பலவிகாரப் பட்ட மனமானது அவ்விகாரத்தின் நீங்கிச் சாந்தமுற்று நிற்கும். அஃது அங்ஙனம் நிற்பவே ஆன்மாவின் கண்ணுள்ள பிராண சக்தியானது மனத்தின் வழியே பலமுகமாய் ஓடிச் சலவாகாமல் தடைப்பட்டு நின்று பெரும் பிரகாச முடைத்தாய்த் திகழும். மேலும், ஒரு சொல்லை நினைந்த வழி அதன்பொருளும், ஒரு