142
❖ 15❖ மறைமலையம் - 15
நிரம்பி விளங்கும் சுழுமுனாநாடியினுள் நுழைந்து மேலேறிச் சன்று அந்நாடியினுச்சியில் வயங்கா நின்ற சந்திர மண்டில மெனப்படும். நாததத்துவத்தோடு ஒற்றுமைப்படும். இங்ஙனம் விந்துவும் நாதமும் ஒற்றுமை யுறுமாயின் ஆன்மா எல்லாக் கருவி கரணங்களும் சுழலப்பெற்ற சுத்தப் பேரானந்த நிலையிலே வைகிடும். இது
66
“விந்துவும் நாதமும் மேருவி லோங்கிடில் சந்தியிலான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவி னரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந்தானே'
என்ற திருமந்திரத் திருவாக்கான் உணரப்படும். மேலும், அங்ஙனம் அக்கினி மயமாய் விளங்கும் விந்து தத்துவமானது அமிழ்தமயமான நாததத்துவத்தைச் சென்று பற்றுதலும், அஃது உருகித் தேகத்திலுள்ள சருவநாடிகளிலும் அமிழ்தம் சென்று பாயும். அவ்வமிழ்தத்தான் நிரப்பப்பட்ட சிவ யோகியின் சரீரத்தினுள்,
“மணிக்கடல் யானை வார்குழல் மேகம் மணிவண்டு தும்பி வளைபேரிகை யாழ் தணிந்தெழு நாதங்க டாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லாற் பார்க்க வொண்ணாதே”
என்ற எல்லா அற்புத நாதங்களும் கேட்குமாகலின், அவர்சரீரம் சுத்த ஞானமயமாயே விளங்குமல்லது நம்ம னோர்க் குள்ள பிராகிருதசரீரம் போல்வதன்றாம். அவர் சரீரம் அவர் நினைந்த வாறெல்லாம் பூதாகாய பரமா காயங்களில் வரைவின்றி இயங்கும். இதுகண்டே சான்றோர்,
“பசுகரணங்க ளெல்லாம் பதிகரணங்களாக
வசிபெறு மடியார்க்காயின் மன்னிய ஒருமை தன்னால் இசையு மற்றவரி னான்றோர்க் கென்னுரை ஓம்புகென்னக் கசிவறு மனத்தினேனுங் கட்டுரைப்பது மாண்பன்றே”
என்று கூறினார்.
இனி அகத்தே இப்பிண்டத்தினுள் நடக்கும்பிராணா யாம யோகாப்பியாச முறையினையே எல்லாரும் இனிதறிந்து