பக்கம்:மறைமலையம் 15.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

149

ஒன்றுபடுதல் போலவும் அன்பும் அன்புமே ஒன்றுபடுமாகலின் அன்பே அன்பைத் தோற்றுவிக்கும் எனப்படுமாயிற்று. எம்மிடத்து உண்மை யன்புடைய எம் நேசரைக் கண்டவிடத்து எமக்கும் அன்பு நிகழப் பெற்றதன்றோ? எம்மிடத் தன்பில்லா தெம்மை வெறுப்பாரைக் கண்டவிடத்து எமக்கும் வெறுப்பு இங்ஙனம் அன்புடையராதற்கு

நிகழப்பெற்றதன்றோ?

அன்புடையார் கூட்டுறவும் அஃதில்லாராதற்கு அஃதில்லாரது கூட்டுறவும் அனுகூலமாய் நிற்றலினாலன்றோ தெய்வப் புலமை திருவள்ளுவனார்.

“நிலத்தியல் பானீர் திரிந்தற் றாகுமாந்தர்க் கினத்தியல் பதாகு மறிவு’

என்றும்

"மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலமே மாப் புடைத்து”

(குறள் 452)

(குறள் 458)

என்றும் திருவாய் மலர்ந்தருளினார். அன்பே பழுத் தொழுகும் நல்லாரது இணக்கம் நம்மை அன்பிலே நிலைபெறச் செய்வதொன்றாகையால் அஃதொன்றே நம்மால் வேண்டற் பாலதாம். இஃது அற்புத வைராக்கிய சுத்த சிவஞான சிரேட்ட வள்ளலாரான பட்டினத்துப் பிள்ளையார்.

“நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாதுவேறு நிலையுளதோ வகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே

என்று அருளிச் செய்தமையானும் நன்கு விளங்கும். எனவே, அன்பினைத் தோற்றுவிப்பதற்கு அவ்வன்பினை யுடையாரது நேசம் இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாம்.

னி அன்பென்பதொரு குணம். குணம் யாண்டுந் தனித்து நில்லாதாகலின் அஃதறிவுடைய ஆன்மாக்களி டத்தே இயற்கையே யமைந்து கிடப்பதாம். ஆகவே அறிவுள்ள விடத்தெல்லாம் அன்பு முடனிகழுமென்பதூஉம் பெறப் படும். அறிவில்லாவிடத்து அன்பு நிகழமாட்டா தென்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/182&oldid=1583236" இலிருந்து மீள்விக்கப்பட்டது