* முன்பனிக்கால உபந்நியாசம்
151
நுணுகி நோக்கும்வழி ஆன்மாக்களுக் கியற்கைக் குணமான அறிவு விளங்க வொட்டாவாறு தடைசெய்தும் சிறிது விளங்கு மாறு அத்தடை நீங்கியும் உடனின்று ஆவரித்து வருகின்ற ஆணவமலம் ஒன்று உண்டென்று இனிது பெறப்படும்.
னி
இனி இவ்வாணவமலம் ஆன்மாவிற்கு ஒருகுணமாய் நிற்குமெனின் அஃதான்மாவை எக்காலத்தும் விட்டு நீங்காதாகலின் அதற்கு அறிவுண்டாகாமை வேண்டும், மற்று அதன்கண் அறிவு சிறிதுசிறிதே தோன்றக்காண்டலின் ஆணவம் ஆன்மகுணமாக மாட்டா தென்பதூஉம், அஃதொரு காலத் தான்மாவை வந்துபற்றிற்றெனின் சடப் பொருளாகிய வது அறிவுப்பொருளாகிய ஆன்மாவை வந்து பற்றுதல் து பொருந்தாமையானும், ஆன்மாவே அதனைப் பற்றிய தெனின் இன்பக்கடலான சிவபரம் பொருளைப் பற்றுத லொழிந்து துன்பக்கடலான ஆணவத்தை அறிவுடைய ய ஆன்மாப் பற்றியதென்றல் ஒரு சிறிதும் ஏலாமை யானும், இறைவனே அவ்விரண்டனையும் ஒருங்கு பொருந்த வைத்தானெனின் அஃதவன் இறைமைக்கும் நடுவு நிலைமைக்கும் இழுக்காமாத லானும் பாரிசேடத்தால் அஃதான்மாவின்கண் இயற்கையே பொருந்திக் கிடக்கு மென்பதூஉம் நன்கு துணியப்படும். இது சித்தாந்த பரமா சாரியரான மெய்கண்டதேவர்,
“நெல்லிற் குமியும் நிகழ் செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அவர்சோகஞ் செய்கமலத்தாம்’
என்றருளிச்செய்த வாற்றானும் தெளியப்படும். எனவே, அறியாமையைச் செய்யும் ஆணவம் ஆன்மாவில் உடனிற்பது பற்றியே நம்மனோர்பால் அறியாமை நிகழப் பெறுகின்றதே யல்லது அஃதான்மாவின் குணமாதல் செல்லாமையின் அவ்வறியாமை அறிவு என்னு மிரண்டும் இரு வேறு பொருட் குணங்களாதல் பெறப்பட்டது; ஆகவே அவை யிரண்டும் ஆ ன்மாவிற்கே உரியவென்று வினாவுதல் போலியா மென்றொழிக. அது கிடக்க.
விட்டு
ம
இனி இவ்வறியாமை யென்னும் அழுக்கு ஆன்மாவை ஒழியுமாறி யாங்ஙனமெனின்;- களிம்பு ஏறிய