பக்கம்:மறைமலையம் 15.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

153

இல்லையாயின் ஆன்மாக்கள் ஒருவர் ஒருவரைக்கூடி

அறிவுடையராய் அதனான் அன்பு நிகழப்பெற்று இன்ப மெய்துதல் செல்லாது. ஆன்மாக்களுக்குச் சரீரங்கள் தரப்பட்டமையாலன்றோ ஒருவர் ஏனை யொருவரோடு கூடி அளவளாவப் பெறுகின்றனர். இருளைக் கண்டால் விளங்கப் பெறாதகண் ஒளியைக் கண்டதுணையானே விளங்குதல் போல ஆணவத்தால் அறிவு விளங்காத ஆன்மா இவ்வுடம்பு வாயிலாக ஏனையோ ரறிவுடையாரைக் கண்ட மாத்திரை யானே அறிவு விளங்கப் பெறுகின்றது. இவ்வாறு அவ்வறிவு முதிர முதிர அம் முதிர்ச்சியிலே அன்பு சுரக்கின்றது. இப்படி யெல்லாஞ் சரீரம் பந்தத்தால் அறிவுமுதிர்ச்சியும் அன்பு விளைவும் நிகழல் பற்றியே பரிமேலழகியாருந் திருக்குற ளுரையிலே ‘அன்பெனப்படுவது இயைபுடையார் மாட்டுத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி’ என்றுரை கூறினார்.

னி

எம்

இனி இயைபுடையார் மாட்டுத் தோன்றுஞ் சம்பந்தம் வாயிலாக அன்பு முறைமுறையே நிகழப் பெறுமாற்றை விளக்குவாம்.யாம் பச்சைப் பசுங்குழவியா யிருந்த பருவத்திலே எம்மைக் கருணை ததும்பவெடுத்துப் பாலூட்டிய அம்மையை யறிந்தறிந்து அவளிடத்து அன்புடைய மாயினேம். அதன்பின் பிள்ளையாய் வளர்ந்த பருவத்திலே எமக்கு வேண்டும் ஆடையணிகலங் களெல்லாம் அணிவித்துக் கல்வி பயிற்றுதற்கு வேண்டுஞ் சாதனங்க ளெல்லாம் செய்வித்து உபகாரம் ஆற்றிவந்த தந்தையின் கருணைத் திறத்தை யறிந்தறிந்து அவன்பால் அன்பு நிகழப் பெறுவேமாயினேம். அதன்பின் கலாசாலையிலே வாலிபப் பருவத்தில் அறிவுநூல் பலவும் விளங்கப் போதித்துவரும் ஆசிரியரது பெருங்கருணைத் திறத்தை அறிந்து வியந்து அவர்மாட்டு அன்புடையமாயினேம்; பின்னும் அப் பவருத்திலே பயன்சிறிதுங் குறியாது எம்மோடு தோழமை கொண்டநண்பர் தம் அன்பின் திறத்தை உணர்ந் துணர்ந்து அவர்மாட்டு அன்பு நிகழப்பெற்றேம்; பின்னும் அப் பருவத்திலே ஒரு நன்மடந்தையை மணஞ்செய்துகொண்டு அவள் எம்பால் டையறாது வைத்தொழுகுங் காதற் கிழமையினை நினைந்து நினைந்து அவள்பால் அன்புடைய மாயினேம்; பின் இவற்றின்மேல் எம்தளர்நடைப்புதல்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/186&oldid=1583240" இலிருந்து மீள்விக்கப்பட்டது