பக்கம்:மறைமலையம் 15.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

❖ - 15 மறைமலையம் - 15

அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்று திருவாய் மலர்ந்தருளுவாராயினார்.

தினைத்தனையேயுள்ள மலரிற் சுரக்குந்தேன் அத்தினை யளவிலுஞ் சிறிதாயிருப்பதாகலின் அதனை நாவிலிட்டுச் சுவைத்தால் அது மிகுந்த இனிமைதராது.பனைத்துணை யாகப் பருத்த கருப்பங்கட்டியை உடைத்துடைத்துண்டால் அதுபேரினிமை பயக்கும். உலகத்திலுள்ள சருவ ஆன்மாக்க ளிடத்தும் தனித்தனியே விளங்கும் அன்பு மிகச் சிறிதாகலின் அவரோடு மாத்திரம் சம்பந்தப்படுவார்க்கு வரும் அன்புஞ் சிறிதாகவே யிருக்கும். ஒரு பொன் வள்ளத்தில் நிறைத்த அமிழ்தம் அவ்வள்ளத்தின் அளவேயிருக்குமல்லது அதன் மேற்படாது; ஒரு பெரும் பொற் கடாரத்திலே நிறைத்த அமிழ்தம் அப்பொற் கடாரத்தினளவாய்ப் பெரிதாகவே யிருக்கும். இது போல, ஏகதேச அறிவும் ஏகதேச வியாபகமு முடைய ஆன்மாக்களிடத்து நிரம்பிய அன்பு சிறிதாகவும், வியாபக அறிவும் வியாபக இருப்புமுடைய சருவேசுரன்பால் நிறைந்த அன்பு வரையறை யின்றிப் பெரிதாகவும் இருப்பன வாம். ஆகவே, சிற்றறிவால்வருஞ் சிற்றின்பத்தை வெறுத்துப் பேரறிவால் வரும் பேரின்பத்தை விரும்பி அப்பேரின் பத்தைத்தர வல்லனான சிவபிரான் மாட்டு இடையறாத நேசமுடையராய் ஒழுகுதலே உயிர்களுக்கு இன்றி யமையாப் பெருங்கடமையாம். இவ்வுண்மையினையே 'தினைத்தனை’ என்னும் மேலைத் திருவாக்கு வற்புறுத்துவதாயிற்று. இத்தனையுங் கூறிய வாற்றால் ஆன்மாக்களிடத்துள்ள அன்பின் நிலையுஞ் சருவேசுரனி டத்துள்ள அன்பினிலையும்

விளக்கப்பட்டன.

L

இனி அளவால் வேறுபடினுந் தன்மையால் ஒன்றே யாகலின் ஆன்மாவின் அன்பினிலைக்குஞ் சருவேசுர னன்பினிலைக்கும் பேதமென்னையெனின், - இறைவன்கண் ணுள்ள அன்பு என்றுந் தானே பிரகாசிப்பதாம் பிறிதொன்ற னையும் பிரகாசிக்கச் செய்வதாம். ஆன்மாவின்கண்ணுள்ள அன்பு தானே பிரகாசிக்க மாட்டாதாம், பிறிதொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/189&oldid=1583243" இலிருந்து மீள்விக்கப்பட்டது