முன்பனிக்கால உபந்நியாசம்
159
சீவன் சீவனே; சிவன் சீவனாகான், சீவன் சிவனா கான்; ஆயினுஞ் சிவன் சீவனாயும் அவனின் வேறுமாயும் நிற்கும் பெற்றியா னென்க. இங்ஙனம் சிவசத்தி ஆன்ம சத்தியோடு பேத மாதலுமின்றி அபேதமாதலுமின்றித் துவிதமாதலு மின்றி ஏகமாதலுமின்றி இரண்டற நிற்றல் பற்றியே
"
'
ఏకమేవారు ద్రోనద్వితియ్యామతస్థే " ఏక మేవాద్వితీయంబ్రహ్మా "
என்னும் உபநிடத வாக்கியங்க ளெழுந்தன. சிவஞான சித்தியும்
“உலகெலா மாகி வேறா யுடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையி னமர்ந்துசெல்லத் தலைவனா யிவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனாகி நின்றன னீங்காதெங்கும்”
பொருளில்லையெனவுந்
தெனவும்
தமக்குத்
என்றிவ் வியல்பை நன்கெடுத்து விளக்கியது. இவ்வுண்மை யுணராத ஏகான்ம வாதிகள் அத்துவித மென்பதற்கு ஒன்றென்று பொருள் கொண்டு பிரமம் ஒன்றேயுள்ள இரண்டாவதொரு தோன்றியவா றெல்லா முரைப்பர். ஒன்றென்னும் பொருளை யுணர்த்துதற்கு ஏகம் என்னுஞ் சொல்லுண்டாக லின் மீட்டும தனை உணர்த்துதற்கு அத்துவிதமென மேலு மொருசொல் வேண்டல் மிகைப்படக் கூறுதல் என்னுங் குற்றமாம்; மற்று அத்துவித மென்னுஞ் சொல்லின் உண்மைப் பொருளியா தென்பார்க்கு ஒன்றை உணர்த்துதற்கு ஏகமெனுஞ் சொல்லும் இரண்டை உணர்த்துவதற்குத் துவிதமெனுஞ் சொல்லுங் காணக் கிடத்தலால் ‘அத்து விதம்’ என்பது இவையிரண்டின் வேறான பொருளுடைத் தாதல் நன்கு விளங்கும். சிவம் உயிர்வேறு தான்வேறெனத் துவிதமாய் நில்லாமலும், சிவம் வேறு பொருளின்றித் தான் ஒன்றேயாய் நில்லாமலும் என்றும் உலகுயிர்களோடு ஒன்றும் இரண்டு மாகாத ஓர் அற்புத யைபுற்று நிற்றலின் அவ்வற்புத இயைபைக் குறிக்கவே அத்துவிதம்' என்னுஞ் சொற்பிரயோகங் காணப் படுவதாயிற்று. எனவே அத்து விதம் என்னுஞ் சொற்பொருள் ஒன்றும் இரண்டுமாகாத 'இரண்டன்மை' என்பதேயாகும். ஆகவே,