160
❖ - 15 மறைமலையம் – 15
பொருட்டன் மையால் வேறே யாயினுங் கலப்பால் ஒன்றேயாய் நிற்கும் அத்துவித இயைபு பற்றிச் சிவசத்தியும் அதனான் வியாபிக்கப்பட்ட ஆன்மசத்தியும் ஒன்றென “அன்பே சிவமாவதியாரு மறிகிலார்” என்பதனான் வற்புறுத் தருளினார்
என்க.
இனி ஆன்மா ஆணவமலவயப்பட்டு அறிவிழந்து கிடக்கின்ற பெத்தக் காலத்தும் சிவசிற்சத்தி உடனின் றுபகரித்து வருமாயின் அதனை அது தெரிந்து கொள்ளாமை என்னையெனின்;- சூரியனெதிரிலே நின்றாலுங் குருட்டுக் கண் அச்சூரியனையும் ஏனைப் பொருள்களையுங் காண மாட்டாதவாறு போல், ஆணவமலத்தாற் கவிக்கப்பட்ட ஆன்மாவும் தன்னோடுடனின் றுபகரித்துவருகின்ற சிவ சத்தியைக் காணமாட்டாதாகும். கண்ணிற் காண்டற்குரிய ஆற்றலிருப்பினும் அது மேகபடலத்தாற் கவரப்பட்டிருத் தலின் கதிரொளியினாற் பயனெய்தா தாகின்றது. மற்று அப்படல நோய் பழுத்து முதிர்ந்தவுடன் பரிகாரி கருவி கொண்டு அப்படலத்தை உரித்தெடுக்கப் பின் அக் கண்ணொளி கதிரொளியைப்பற்றிக் கொண்டு விரிந்து விளங்குதல் போல இறைவனும் மாயையென்னுங் கருவி ஆணவமலத்தின் முதிர்ந்த பக்குவங் கண்டு அதனைச் சேதித்ததுணையானே ஆன்மாவில் முன் உடனின்ற சிவசத்தியின் பிரேரகத்தைப் பெறாதுகிடந்த ஆன்மசத்தி தலைப்பட்டெழுந்து அதனைப் பெற்றுக்கொள்ளும். இது
“அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்
கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன் அருட்கண்ணாற் பாசத்தை நீக்கும் பகலலர்த்துந் தாமரைபோல் நேசத்திற் றன்னுணர்ந்தார் நேர்"
என்னுஞ் சிவஞான போதத்
விளக்கப்பட்டமை காண்க.
காண்
திருவாக்கான்
நன்
நன்கு
இனி அவ்வாணவத்தின் வேறாய்ப்பிரிந்த ஆன்மசத்தி சிவசத்தியோ டொருமித்து நின்றவழி அவையிரண்டும் ன்றாய்ப் போகுமென்றுரையாமோவெனின்; உரையாம். பெத்தத்தில் நின்றவாறே முத்தியினும் ஆன்மாச் சிவத்தோடு