* முன்பனிக்கால உபந்நியாசம்
161
அத்துவித இயைபுற்று நிற்குமே யல்லது தன்முதலிழந்து போமாறு சிறிதுமில்லை என்க. இஃது
66
'ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ'
என்ற தாயுமான சுவாமிகள் திருவாக்கானுந் துணியப்படும். அற்றேல், பெத்த நிலைக்கும் முத்தி நிலைக்கும் வேறுபாடு என்னையெனின்; பெத்தத்தில் ஆன்மாவின் அறிவுசெயல் களெல்லாம் ஆணவ வயப்பட்டுத் தோன்றும்; முத்தியில் அவையெல்லாம் சிவசத்தி வயப்பட்டு விளங்கும், அதுபற்றி ஆன்மா ஒருமுதலன்றா யொழித லில்லையாம். இரவின்கண் விளங்கித் தோன்றுகின்ற நட்சத்திர கணங்கள் சூரியன் றோன்றுதலும் தம் ஒளிமழுங்கி விளங்காவாயினும் அவை பகற்காலத்து முண்டென்பது நிச்சயிக்கப் படுதல்போலப், பெத்தக் காலத்து விளங்கிய ஆன்ம அறிவுசெயல்கள் முத்தியில் றைவ னொளியான் விழுங்கப் பட்டு விளங்கா வாயினும் ஆண்டும் அவையுண்டென்பது துணிபேயாம்.
“வெய்யோ னொளியிலொடுங்கி விளங்காது வெய்யோனை யாகாத மீன்போல -- த
மெய்யவனிற்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனுங் கண்டுடனாய் மன்னுதலைக் காண்
என்ற சிவஞானபோதத் திருவாக்கிதனையே புலப்படுத்து வதாகும். ஆகவே, பெத்தநிலை முத்தி நிலை யிரண்டினும் ஆன்மா வொருதனி முதலாய் உண்டென்பது பெறப் படுமென்க.
னி ‘அன்பே சிவமாவதி யாருமறிந்தபின்' என்றத னால் அன்பே சுத்தசிவ சொரூபமாகு மென்பதூஉம், ஏனை யான்மாக்க ளெல்லாரிடத்தும் விளங்கப் பெறும்அன்பும் அவற்றோடு உடனின்றுபகரித்து விளக்கி வருகின்ற சுத்த சிவசத்தியே யாகுமென்பதூஉம் கடைப்பிடித்தல் வேண்டு மென
வற்புறுத்தவாறாயிற்று.
இவ்வுண்மையை அறிவார்க்கன்றி ஏனையோர்க்குச் சிவமாய் அமர்ந்திருக்கும் முத்தி நிலைவாய்ப்பது கூடாதா