162
குணம்
❖ - 15❖ மறைமலையம் - 15
கலின் ‘அறிந்தபின்' என்று விசேடித்துக்கூறினார். எனவே, ஞானத்தாலன்றிப்பக்தி உண்டாதல் இல்லை யென்பதூஉம் இதனாற் பெறப்படுவதாகும். வேனிற்காலத்து வெப்பத்தால் வருந்தி விடாய்த்துச் செல்கின்றான் ஒருவன் பழக்குலை மிகுதியுமுடைய கொடி முந்திரிப் பந்தரின் கீழ் இருப்பினும், அப்பழம் உண்ணப்படுவதெனவும் அதன் இனிய இரசம் நீர்வேட்கையைத் தணித்துத் தேகாரோக்கியத்தைத் தருவதெனவும் அறியாதவனாயின் அதனாற் பயன்பெறாது வருந்திக்கிடப்பன்.அதுபோலத் தன் மாட்டுள்ள அன்பென்னுங் ணம் சிவசத்தியோடு இயைந்து நிற்றலினாலே சுத்த சிவ சாரூபமாகும் என்றுணர்ந்து ஞான விசாரணையினா லறிந்தாலல்லது அவனுக்குப் பத்தியோகானுபவம் சிறிதும் உண்டாகாது. அன்பு சிவசொரூப மாதலை ஞானவிசாரணை யினால் உணராத ஆன்மாக்கள் எத்தனை கோடி கோடியாகச் சுத்த உலகப் பெருஞ் சேற்றில் விழுந்து புரண்டு மக்கள் யாக்கையாற் பெறும்பயனை இழந்து போகின்றனர்! நாடோறும் பொருள் தொகுப்பதற்கென்றே அவர்கள் படும் பாட்டையும் அவர்கள் மிருகங்கள் போலஉண்டு உறங்கிக் கழிதலையுங் கண்டு அவர்க்கிரங்கி ஞானோபதேசம் செய்ய முந்தும் பெரியார் பேருரைகளையும் அவர் கடைப்பிடியாது வறிதாக்குகின்றனர்! அந்தோ!
.
இனிப் பக்தி நிகழ்தற்கு ஞானம் ஏதுவாதலை உணராதார் சிலர் ஞானமேமுத்தி என்பார். ஞானம் என்பது ஒன்றனை அறியும் ஆராய்ச்சி அறிவாம். பக்தி என்பது அங்ஙனம் அறிந்ததனை அனுபவித்துநிற்கும் நிலையாம். திராட்சப்பழம் நிரம்பச் சுவை உள்ளதெனவும் அதனை உண்டாற் களை தீருமெனவும் அறிந்த அறிவுஒன்று; அங்ஙனம் அறிந்தபின் அப்பழத்தைப் பறித்துச் சுவைத்து இன்புற்றிருந்த நிலை பிறிதொன்று, திராட்சப்பழத்தை அறிந்த அறிவே, அதனை உண்டால் விளையும் இனிமையைப் பயவாது. அது போல, அன்பு சிவசொரூபம் என்றறிந்த ஞான உணர்ச்சி பின் பக்தியைப் பயப்பதற்கு ஓர் ஏதுவாகு மேயல்லது அவ்வுணர்ச்சியே பக்திநிலையாதல் ஒருவாற் றானும் பெறப்படுவதில்லை என்க. ஆதலால் ஞானமே முத்தியாமென்பார் கூற்றுப் பொருந் தாதென மறுக்க. அற்றேல், ஞானத்தாற் சிவனடியைச்
66