165
உ
திருச்சிற்றம்பலம்
பிரணவ இரகசியம்
ய
பிரணவம் என்பது எல்லாச் சத்தங்களுக்கும் மூலமாய்த் தோன்றும் இயற்கை நாதமாம். இதழ் நா பல் அன்னங்களின் செயற்கையாற் பலதிறப்பட்டுத் தோன்றும் மற்றை எழுத்தோசைகள் போலாது, உலகத்தியற்கையாய் எழுந்து அவ்வோசைகள் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாய் முன் நிற்பதாகலின் பிரணவ ஓசை கழிபெருஞ் சிறப்புடைய தாயிற்றென்க. காதில் வைத்தறியக் கிடந்த வழிப் பிறந்த சங்கோசையும், கரை மருங்கு நின்றவழி அறியக் கிடந்த கடலோசையும் 'ஓ' வென ஓலமிட்டிரைதல் காணப்படுத லால் ஃதொன்றுமே உலகத்தியற்கையாய்ப் பிறக்கும் இயற்கை நாதமென்பது பெறப்படும்.
னி
இனி உலகத்துச் செயற்கையாற் றோன்றும் உயிரு மெய்யுமாகிய விகார ஒலிகளெல்லாம் புறத்தே தோன்றும் அறிவில்லாத உலக இயற்பொருள்களையும் அகத்தே ஆ ன்மாவின்கண் உண்டாம் உணர்வுவேறுபாடுகளையும் தெரிவிப்பனவாம். ஆகையால், அவ்விகார ஒலி வழிப்பட்டு நடைபெறும் ஆன்ம அறிவானது அவ்விகார ஒலிகளோடு ஒற்றுமைப்பட்டு அறிவுக்குக் கோசரமாகும் பல திறப்பட் சேதனா சேதனப் பொருள் வயப்பட்டு நின்று தானும் பலமுகமாய் விரிந்து விகாரப்படுகின்றது. இதனால், ஆன்ம அறிவுக்குப் புலனாய்த் தோன்றுவன் வெறுஞ் சத்தரூபமாய் விளங்குஞ் சத்தப் பிரவஞ்சமும், குணங்கள் திரண்ட வெறும் பொருள்மாத்திரையாய் விளங்கும் அர்த்தப் பிரவஞ்சமும் என