பக்கம்:மறைமலையம் 15.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் - 15

மூன்றோசைகளைத் தன்னுள் அடக்கி நிற்ப தாகும். ஒருவன் மூடியிருந்த வாயைத் திறந்த மாத்திரை யினாலே அகர வோசை பிறவா நிற்கின்றது; அங்ஙனம் பிறந்த அவ்வோசை யானது இரண்டிதழையுங் கு விக்கு முயற்சியாற் சிறிது விகார முறுத்தப்படுதலின் உகரந் தோன்றுகின்றது; அங்ஙனஞ் சிறிது விகார முறுத்தப்பட்டு நின்ற அவ்வோசை பின்னும் வாயை மூடும் வழி ஒட்டும் இதழ் முயற்சியால் மகரம் தோன்றுகின்றது. இனி இவ்வாறு அகரம் பிறந்து உகரம் தோன்றுதற்கு இடையே நாவின் றொழிலால் இகரம் பிறப்பதாகலின் அ, உ, ம் என்னும் இவ்வோசைகட்கு இடையே இகரம் மறைவாய் உண்டென்பது அமுங்கி அமுங்கி தமிழ் தமிழ் என இகரம் உகரமாய் உச்சரிக்கப்படுமாற்றால் இனிது பெறப்படும். இவ்வகரத்தின் நீட்டமே ஆகாரமும் இகரத்தின் நீட்டமே ஈகாரமும் உகரத்தின் நீட்டமே ஊகாரமுமாம். இனி இவ்வகரமும் இகரமும் புணர்தலால் எகரமும், இதன் நீட்டம் ஏகாரமும், அகரமும் உகரமும் புணர்தலால் ஒகரமும் இதன் நீட்டம் ஓகாரமும், அகர இகர யகரங்கள் புணர்தலால் ஐகாரமும், அ உ வகரங்கள் புணர்தலால் ஔகாரமுமாக எல்லா உயிரெழுத்துக்களும் பிறந்தன. இனி அரை மாத்திரை யளவாய் ஒலிக்கும் மகர ஒற்றொலி குழந்தைப் பருவத் தெல்லார்க்கும் இயற்கையிற் றோன்றுவதாகலின் அஃது ஏனை எல்லா மெய்யெழுத்துக் களுந் தோன்றுதற்குக் காரணமாம்.

D

னி

இனி இப்பிரணவத்தின்கண் விரவி ஒலிக்கும் அ, உ, ம் எனும் அம்மூன்றோசைகளும் சிருட்டி திதிசங்காரம் என்னும் மூன்று கிருத்தியங்களையும் அறிவிப்பனவாம். அகரம் முதன்முதற் றோன்று கின்ற ஒலியாகலின் அது சிருட்டி யினை உணர்த்துவதாகும்; உகரம் அங்ஙனந்தோன்றிய ஓசை சிறிது விகாரமுற்று நிலைபெறுவதாகலின் அது திதியினை ணர்த்துவதாகும். மகரம் முன்றோன்றிய அவ்வோசை டுங்குவதாகலின் அது சங்காரத்தை உணர்த்துவதாகும்; ஆகவே, சிருட்டித் தொழிற்குரிய பிரமாவும் திதிக்குரிய திருமாலும் சங்காரத்திற்குரிய உருத்திரனும் எனும் மூவேறு சத்திகளுடைய மூன்று சத்தர்களும், இனி னி அம்மூன்றக் கரங்களுந் தோன்றுதற்கு நிலைக்களனான விந்துநாதம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/201&oldid=1583255" இலிருந்து மீள்விக்கப்பட்டது