முன்பனிக்கால உபந்நியாசம்
169
இரண்டு தத்துவங்களுக்கும் உரியரான மகேசுர சதாசிவரும் ஆகிய கிய பஞ்சமூர்த்திகளும் இப்பிரணவ மந்திர உறையுளில் வதிதருவரென்க.
“எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவமாம் நண்ணிய விந்துவொடு நாதத்துக்--கண்ணிற் பகரயன்மா லோடு பரமனதி தெய்வம் அகர வுகரம் மகரத்தாம்”
என்பதிதற்குப் பிரமாணம்.
இனி விந்துவும் நாதமும் என்னும் இரண்டும் அம்மற்றை மூன்றக்கரங்களுக்கும் நிலைக்களனாவது யாங்ஙனமெனின்;-- விந்து என்பது அசேதனப் பிரபஞ்சங் கள் அனைத்திற்குங் காரணமாகிய சுத்த மாயையாம். இஃது அருவாய்த் தன் கீழுள்ள எல்லாத் தத்துவ புவனங்களையும் வியாபித்துக் கொண்டு புள்ளி வடிவினதாய் விளங்கும். இச் சுத்தமாயையினை உள்ளிருந்து இயக்கும் இறைவனருட்சத்தி யினால், இதன்கண் ஓர் இயக்கம் உண்டாம். இப்புள்ளி இயங்கும் போது உண்டாவது ஓர் ஓசையாகலின் அவ் வோசையே நாத தத்துவமாகும். அப்புள்ளி இயங்குங் காலத்து நீள உண்டாம் வடிவு வரி வடிவாகலின் அந்நாத தத்துவத்திற்குரிய வடிவு வரிவடிவேயாம். ஆங்கிலத்திற் பீசகணித சாத்திரம் வல்லாரும் புள்ளியென்பது அறிவாற் குறிக்கப்படுவதே யல்லது தான் ஒரு பரிமாண மில்லாத தென்றும், வரியென்பது அப்புள்ளியின் இயக்கமே யல்லது அகலங்கனம் முதலிய பரிமாண மில்லாத தென்றுங் கூறினார். ஆகையால், அருவாய் அறிவால் மாத்திரங் குறிக்கப் படுகின்ற தன்மை யுடையதாகலின் சுத்தமாயை புள்ளி வடிவினதென்றும், அதன் இயக்கமாகிய நாதம் வரிவடிவின தென்றும் சித்தாந்த நூல்கள் கூறினமை பெரிதும் பொருத்தமே யாம் என்க. இனி இவ்வியட்டிப் பிரணவத்தின் கண்ணவான அ, உ, ம் என்னும் மூன்றக் கரங்களில் அகரமே விந்து வடிவாகிய புள்ளியாகும், உகரமே அவ்விந்துவின் இயக்கமான நாதத்தின் வரிவடி வாகும்; அவ்வரிவடிவின் கடைப் புள்ளியே மகரமாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ச் சிலாசாதனங்களில் அகரம் புள்ளி வடிவாகவும் உகரம் வரிவடிவாகவும் மகரம் பகரத்தினுட் புள்ளிவடிவாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. மகரம் பகரத்தினுட் புள்ளிவடிவாய் நிற்கு மென்பதை ஆசிரியர்
ப்