170
❖ - 15❖ மறைமலையம் – 15
நச்சினார்க் கினியருந் தொல்காப்பிய எழுத்ததிகார வுரையிலே இனிது விளக்கினார். இனித்தனிமெய் யெழுத்துக்க ளெல்லாம் தலையிற் புள்ளிபெற்று நிற்கு மென்றும், அவை அகர வுயிரோடு புணர்ந்தவழி அப்புள்ளி அவற்றுள் மறையு மென்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் "புள்ளி விட்டவ் வொடு முன்னுரு வாகியும், ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தும்” என விளக்கியருளினமையானும் அகரம் புள்ளி வடிவினதென்பதும், அப்புள்ளி தனி ஒற்றெழுத்துக் களினின்றும் வேறு பிரிந்து தனியே நிற்கும் வழியே அம் மெய்யெழுத்துக்கள் தனி ஒற்றுக்களென்று வழங்கப்படு மென்பதும், அப்புள்ளியோடு சேர்ந்து நின்ற வழி அவை உயிர் மெய்யென வழங்கப்படு மென்பதும் நன்கு தெளியப்படும். ஆகையால்,புள்ளிவடிவாகிய விந்து தத்துவமும் வரி வடிவாகிய நாத தத்துவமும் அம்மூன்றக் கரங்களுக்கும் நிலைக்களமா மென்க. இங்ஙனம் இதன் வியட்டி ரூபத்தைக் காணுமிடத்து இப்பிரணவமொழி எல்லா ஓசைகளும் பிறத்தற் கிடனாய்ச் சத்தப் பிரபஞ்ச மனைத்திற்குங் காரணமாய் நிற்றல்
இனிதறியப்படுகின்றது.
இனி னி இப்பிரணவம் அர்த்தப் பிரபஞ்சத்திற்குங்
காரணமாம். விந்து தத்துவ மெனப்படும் வட்டமான சுத்த மாயையை அதனுட் கலந்துநின்ற திருவருட் சத்தியானது
கலக்கிய மாத்திரையினாலே அதன்கண் ஒரு சுழன்ற இயக்கமுண்டாம். இச்சுத்தமாயை இங்ஙனஞ் சுழன்ற யக்க முடைத்தாய் நிற்கும் அவசரத்தினையே குண்டலி யென்று லி
வழங்குவர். இவ்வாறதன்கண் உண்டாம் ம் அச்சுழன்ற
இயக்கத்தால் அம்மாயையின் அணுக்கள் அலையலையாய் எழுந்து ஒன்றை ஒன்று தாக்குதலின் ஒரு நாதமுண்டாம். தயிரை மத்திட்டுச் சுழற்றிக் கடைந்தவழி அதனிற் றிரண்டெழுந்த மதுரமான வெண்ணெய்போல அச்சுத்த மாயையின் கீழ் உள்ள அதோ மாயை அந்நாதத்தாற் கடையப்பட்டுத் தன்கண்உள்ள அணுக்களெல்லாம் ஒன்றோ டொன்று ஒட்டிப் பிரகிருதி மாயையையும் அதன்கண் இவ்வித அண்ட பேதங்களையும் உற்பத்தியாக்கின. ஒரு தட்டிலே மிக நுண்ணிய பொடிகளைப்