178
❖ - 15❖ மறைமலையம் – 15
ப
னி இந்துசமயப் பிரிவான மேற்கூறிய சமயங்களி லெல்லாம் இக்கொள்கைகள் சில குறைந்தும் வேறுசில கூடியும் வேறுவேறு பயர் பற்று நிற்ற நிற்றலைக் காட்டுவாம். காணப்படுவதாய் அறிவில்லாத சடப்பொருளான ளான இப் பிரபஞ்சம் உள்பொருளேயாம் என்னும் அதன்கொள்கையை மாத்திரம் வற்புறுத்திக் கடவுளும் ஆன்மாவும் கன்மமும் இல்லை என்று கூறுவதே சாருவாகமதமாம். இது
“பூதமதினொன்று பிரியப் புலனிறக்கு நீதியினினிற்பன நடப்பனவு முற்போல் ஓதும்வகையாகி யுறுகாரிய முலந்தால் ஆதியவையாமிதனை யறிவதறிவாமே"
என்றும்
66
"இப்படியன்றிக் கன்ம முயிரிறை வேறுண்டென்று செப்பிடு மவர்க்குமண்ணோர் செய்திடுங் குற்றமென்னோ ஒப்பிலா மலடிபெற்ற மகனொரு முயற்கொம்பேறித் தப்பிலாகாயப்பூவைப் பறித்தமை சாற்றினாரே
என்றும்
அவர் கூறுமாற்றால் அறியப்படும். அறிவென்பது நான்குபூதக் கூட்டத்தின் காரியமாய் உண்டாவதென்னுஞ் சாருவாகர் போலாது, சடப்பொருளின் வேறாக அறிவாகிய புத்தி வேறுண்டென்று மாத்திரங்கூறிக் கடவுளும் ஆன்மாவு மில்லையென்பதே பௌத்தமதமாம். இதில் அறிவும் அறிவில்லாத சடமும் வேறென்னும் இந்துசமயக் கொள்கை வலியுறுக்கப் படுதல் காண்க.
னிச் சடப்பொருளும் அதனின் வேறாகிய அறிவும் அவ்வறிவினையுடைய சீவனும், அச்சீவனோடியைந்துவரும் இருவினைகளும் உள்ளனவென்று மாத்திரம் வற்புறுத்திக் கடவுள் இல்லையெனக் கூறுவதே சமணமதமாம்.
இனிப்பிரபஞ்சமும் இருவினையும் ஆ ன்மாவும் வியவகாரத்திலுள்ளன, பரமார்த்திகத்திற் பரப் பிரமம் ஒன்றே யுள்ளது ஏனையவெல்லாம் பொய்ப்பொருளாம் எனக் கூறுவதே மாயாவாதமாம். இதன்கட் கடவுள் அருவமென்றே
வற்புறுத்தப்படுகின்றது. இது