முன்பனிக்கால உபந்நியாசம்
"இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க ளருளப்பழுதை மெய்யாகி யாவும் பொய்யா மதுபோல மருளிற்சகமுஞ் சத்தாகி மருவித்தோன்று மாசில்லாத் தெருளிற்சித்தே சத்தாகும் பித்தாஞ் செகத்தின் செயலெல்லாம்
என்றும்
66
“அறிவா யகில காரணமா யனந்தானந்த மாயருவாய்ச் செறிவாயெங்கு நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச்சுத்தமாய்க் குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும்வேதந் தனக்களவாய்ப் பிறியாதனுபூதிகந் தனக்காய் நின்றதந்தப் பிரமந்தான்”
என்றும் அவர்கூறுதலால் அறியப்படும்.
179
இனிப்பிரபஞ்சமும் ஆன்மாவும் வியவகாரத்திற் போலப் பாரமார்த்திகத்திலும் உள்பொருள்களேயாம் என்றும், ஆனால் வை வாசுதேவன் வடிவேயாய் விளங்கு மென்றும்
அவ்வாசுதேவன் உருவமாகவே யிருப்பானல்லது அருவமாக இருப்பானல்லன் என்றுங் கூறுவதே வைணவ மாம். இது
“மாயையா யுயிராய் மாயா காரிய மாகி மன்னி மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடு மவனாலன்றி
மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப்பின்னை மாயைபோம் போனான்மாயன் வைகுண்டம் வைப்பனன்றே"
என்றவர் கூறுமாற்றால் விளங்கும்.
இங்ஙனம் இம்மதங்களினெல்லாம் இந்து சமயம் காள்கைகள் சிலபலகுறைந்தும் மிகுந்தும் வேறுபட்டும் நிற்றல் இனிதறியப்படும். இனி உலகம் உள்பொருளாதல் சாரு வாகத்தானும், அறிவுஞ் சடமும் வேறுவேறாதல் பௌத்தத் தானும், சீவனும் இருவினையும் உளவாதல் சமணத்தானும், கடவுள் அருவசொரூபியாய் நிற்றல் மாயா வாதத்தானும், கடவுள் உருவத்திருமேனியு முடையனாதல் வைணவத் தானும் பெறப்படுகின்றன வாகலின் இவை யனைத்தும் இந்துசமயப் பிரிவுகளாதற்கு இயைந்தன வேயாம். மற்று, இக்கொள்கை களெல்லாம் தன்கண் முழுதும் அடங்கக் கொண்டு விளங்கும் இந்துசமயம் தான் சிறிதாயினும் ஏகதேசப்படுதலின்றித் தன்கட்